இலங்கையின் தற்போதைய நிலவரம் !  நாடளாவிய ரீதியில் 15 சுகாதார மாவட்டங்களில் 238 கொரோனா தொற்றாளர்கள்

16 Apr, 2020 | 10:48 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று  இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் 15 சுகாதார மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை  238 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.  இன்று இரவு 9.0 மணி வரையிலான 18 மணி நேர காலத்தில் இலங்கையில் புதிய தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

' உண்மையில் 5 நாட்களுக்கு பின்னர், வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சந்தேகத்துக்கு இடமான  நோயாளர்களில் இருந்து தொற்றாளர் ஒருவர்  நேற்று அடையாளம் காணப்பட்டார். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருந்தார். இவரைத் தவிற ஏனைய அனைவரும்  தனிமைப்படுத்தல்  நிலையங்களில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.  

நேற்று அடையாளம் காணப்பட்ட 5 தொற்றாளர்களில், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் தவிர, பலாலி  தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இருவரும்,  கந்தகாடு மற்றும் கட்டுகெலியாவ தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து  புத்தளம் மற்றும் பேருவளையைச் சேர்ந்த இரு பெண்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்' என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

 இந் நிலையில் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 238 தொற்றாளர்களில்  7 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  68 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இந் நிலையில் 167 பேர் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை வெலிகந்த முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   மேலும் நாடளாவிய ரீதியில் 26 வைத்தியசாலைகளில் 161 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 நாட்டில் உள்ள 26 சுகாதார மாவட்டங்களில்,  15 மாவட்டங்களில்  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு, களுத்துறை, புத்தளம், கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி , இரத்தினபுரி, குருணாகல், மாத்தறை,  கல்முனை, கேகாலை,  காலி, மட்டக்களப்பு, பதுளை மற்றும் வவுனியா ஆகிய சுகாதார மாவட்டங்களிலேயே தற்போது தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அத்துடன் இந்த 238 பேரில் 3 வெளிநாட்டவர்களும் அடங்குவதுடன், அவர்களில் ஒருவர் குணமடைந்தும் உள்ளார்.  இதனைவிட அடையாளம் காணப்பட்ட 238 பேரில் 38 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக  தனிமைபப்டுத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

 இந் நிலையில் இராணுவம் மற்றும் கடற்படையினர் ஏனைய பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து முன்னெடுக்கும் தனிமைபப்டுத்தல் நடவடிக்கைகளில்  தற்போதும் 1550 பெர் தனிமைபப்டுத்தி கண்கானிக்கப்ப்ட்டு வருகின்றமை குரிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02