வைரசினை எதிர்த்து போரிடுவதற்கான திறனை அதிகரிக்க முயன்றது சீனா- வுகான் ஆய்வுகூடத்திலிருந்தே ஆபத்து ஆரம்பமானது- அமெரிக்க ஊடகம்;

Published By: Rajeeban

16 Apr, 2020 | 08:46 PM
image

வைரசினை கண்டுபிடித்து அதனை எதிர்கொள்வதற்கான திறன் அமெரிக்காவை விட தனக்கு அதிகம் என சீனா காண்பிக்க நினைத்ததன் விளைவே வுகானின் ஆய்வு கூடத்தில்  வைரஸ் உருவாக்கப்பட்டமைக்கான காரணம் என பல தரப்புகள் தெரிவித்துள்ளதாக பொக்ஸ் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வுகான் ஆய்வுகூடத்தில் உயிரியல் ஆயுதம் எதுவும் தயாரிக்கப்படவில்லை என அந்த தரப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஆவணங்களையும் பார்வையிட்ட தரப்புகள் இதனை தெரிவித்துள்ளதாக பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

வெளவாலில் இருந்து மனிதர்களிற்கு வைரஸ் பரவுவது குறித்து இடம்பெற்ற ஆரம்பகட்ட ஆராய்ச்சியே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள பல தரப்பினர் முதல் நோயாளி அந்த ஆய்வு கூடத்தில் பணியாற்றினார் அவர் பின்னர் வுகானில் மக்கள் மத்தியில் சென்றார் என குறிப்பிட்டுள்ளனர் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

இரகசிய மற்றும் பகிரங்கமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் மூலம் இதுதான் நடந்துள்ளது என்பது குறித்த உறுதியான நம்பிக்கை  காணப்படுகின்றது என தெரிவித்துள்ள பொக்ஸ் நியுஸ் எனினும் அது உறுதியான விடயமல்ல அவ்வாறு கருதக்கூடாது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த தகவல் குறித்து டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த சிலரும் தொற்றுநோய் குறித்த நிபுணர்களும் சந்தேகம் கொண்டுள்ளனர் இது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

எனினும் கொவிட் 19 குறித்து சீனா அரசாங்கம் தகவல்களை பெருமளவிற்கு மூடி மறைத்தது என அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர் எனவும் பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களும் ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்தவர்களும் ஆரம்ப கட்டத்தில் நிலைமை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்கான ஆதாரங்களாக ஆவணங்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள பொக்ஸ் நியுஸ் ஆரம்பத்தில்  வுகான் சந்தையே காரணம் என தெரிவிக்கப்பட்டது,ஆய்வுகூடத்திலிருந்து  கவனத்தை திசைதிருப்பபுவதற்காக வுகான் சந்தை குறித்து தகவல் வெளியிடப்பட்டது என சில தரப்பினர் கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52