2 மில்லியன் முகக் கவசங்களை ஜப்பானுக்கு வழங்கும் தாய்வான்

Published By: Vishnu

16 Apr, 2020 | 06:55 PM
image

ஜப்பானில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவுவதற்காக தாய்வான் 2 மில்லியன் முகக் கவசங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அது மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட கொரோனாவினால் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்காகவும் தாய்வான் 16 மில்லியன் முகக் கவசங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கான தாய்வானின் இந்த உதவியின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு வலுப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளைப் போலவே ஜப்பானும் தாய்வானுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இருவருக்கும் நெருக்கமான அதிகாரப்பூர்வமற்ற உறவுகள் உள்ளன. 1895 - 1945 க்கு இடையிலான காலப் பகுதியில் ஜப்பானின் காலனிதித்துவத்தின் கீழ் தாய்வான் இருந்தது.

அண்மைய நாட்களில் ஜப்பானில் குறிப்பாக டோக்கியோவில் கொரோனா தொற்று வீதம் அதிகரித்து வருவதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான இந்த உதவியை வழங்க தாய்வான் முன் வந்துள்ளது.

கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் கொண்டவர்களை மட்டுமே பரிசோதனைக்குட்படுத்தும் ஜப்பானால் இதுவரை 8,626 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 178 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10