வற் வரியில் இனிமேல் எக்காரணம் கொண்டும் திருத்தம் செய்யப்படமாட்டாது. வற்வரி அறிவிடப்படுவது தற்காலிகமாகவேயாகும். குறித்த வரியிலிருந்து முன்னைய ஆட்சியின் கடனை அடைக்கவே முயல்கின்றோம். எனினும் அபிவிருத்திக்கு எம்மிடம் போதுமான அளவிற்கு பணம் கையிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

தற்போது அரசாங்கத்தை குழப்பும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வற்வரி அதிகரிக்கப்பட்டதனை வைத்து கொண்டு குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றைய தினம் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் கடையடைப்பு இடம்பெற்றுள்ளன. இது அரசாங்கத்தை குழப்பும் சதி திட்டமாகும். மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பியதன் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.