கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழு கூடியது: நிதியத்தின் வைப்பு மீதி 655 மில்லியனாக அதிகரிப்பு

Published By: J.G.Stephan

16 Apr, 2020 | 08:39 AM
image

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முகாமைத்துவம் செய்யும் முகாமைத்துவ குழுநேற்று (15.04.2020) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. லக்ஷ்மன் இக்குழுவிற்கு தலைமைவகிக்கின்றார். ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமை நிதி அதிகாரி ரவிந்திர ஜே.விமலவீர நிதியத்தின் செயலாளராக உள்ள அதேநேரம் அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட 16பேர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

நிதியத்திற்கு பல்வேறு தரப்பிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்த நிதியத்தை தாபித்ததன் மூலம் ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்த்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக குழு கலந்துரையாடியது.


கொரோனா ஒழிப்புக்கு தேவையான மருந்துகள், மருத்துவ ஆராய்ச்சி உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வசதிகளுக்காக நிதித் தேவைகளை வழங்குதல், சுகாதாரத் துறையிலும் அத்தியாவசிய மக்கள் சேவைகளை வழங்குவோரினதும் சுகாதார பாதுகாப்பு, சிறுவர்கள், பெண்கள், குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், இடர்நிலைக்குள்ளாகக் கூடியவர்களுக்காக நிதித் தேவைகளை வழங்குவது நிதியத்தின் நோக்கமாகும். WHO, UNICEF, UNDP, WB, ADB மற்றும் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளிகள், முகவர் நிறுவனங்களுடன் நிதி சேகரிப்பதை ஒருங்கிணைப்பதும் நிதியத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவன மற்றும் தனிப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது சுமார் 655 மில்லியன் ரூபாவை அடைந்துள்ளது. ரக்னா பாதுகாப்பு நிறுவனம் அன்பளிப்பு செய்த 3மில்லியன் ரூபா, அபி வெனுவென் அபி நிதியத்தின் தென் கொரிய கிளை அன்பளிப்பு செய்த  4 மில்லியன் ரூபா பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

NDB வங்கி 07 மில்லியன் ரூபா, லங்கா ஹொஸ்பிடல் கோபரேஷன் 6.7 மில்லியன் ரூபா, கொமர்ஷல் வங்கி 10 மில்லியன் ரூபா, கலம்பு டொக்யார்ட் பீஎல்சி நிறுவம் மற்றும் டீ.ஜே.ஏ சமரசிங்க தலா 05 மில்லியன் ரூபா, நகர அபிவிருத்தி அதிகார சபை 2.5 மில்லியன் ரூபா, இலங்கை பட்டய மனித வள முகாமைத்துவ நிறுவனம், இலங்கை உயர் தொழிநுட்ப கற்கைகள் நிறுவனம் மற்றும் சமன் இன்டஸ்ட்ரீஸ் என்ட் சப்லயர்ஸ் தனியார் நிறுவனம் தலா ஒரு மில்லியன் ரூபாவும் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை 02 மில்லியன் ரூபாவும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

BASF லங்கா தனியார் நிறுவனம் 05 லட்சம் ரூபா, நுகேகொட டபிள்யு. மஞ்சுல பொதேஜு ஒரு லட்சம் ரூபா, ரஞ்சன் டி சில்வா 02 லட்சம் ரூபா, இலங்கை பொலிஸ் அங்கவீனமுற்ற படைவீரர்கள் சங்கம் 60000 ரூபா நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17