அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

15 Apr, 2020 | 08:12 PM
image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்று புதன்கிழமை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பதிகாரியுமான ஏ.எல். ஜகுபர் சாதிக் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம், மல்லாகம் சுன்னாகம், ஆவரங்கால், பருத்தித்துறை உள்ளிட்ட இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு இன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இரண்டு குழுக்கள் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

இதன்போது நாட்டு அரிசியை கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்கள் 7 பேருக்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராகவும் பொருள்களில் பொறிக்கப்பட்ட அதிகூடிய சில்லறை விலையிலும் பார்க்க கூடிய விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலைகளை மீறி பாவனையாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளரும் ஏ.எல். ஜகுபர் சாதிக் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31