ஊரடங்கு வேளையில் மதுபானம் கிடைக்காமையினால் மெத்தனோலை பருகிய மூவர் பலி

Published By: J.G.Stephan

15 Apr, 2020 | 06:32 PM
image

இந்தியா முழுவதும்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காததால், போதைக்காக மெத்தனோலை (மரச்சாராயம்) தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம், திங்கள்ட்கிழமை, கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் மெத்தனோலை தண்ணீரில் கலந்து போதைக்காக அருந்தியுள்ளனர்.

இதில், சந்திரகாசம் (55) என்பவர் நேற்று, செவ்வாய்க்கிழமை, உயிரிழந்துள்ளார்.மேலும் மூவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருக்கவே அவர்களைப் புதுச்சேரி ஜிப்மர் வைத்தியசாலையில் சேர்த்தனர்.



இந்நிலையில், கடலூர் மற்றும் புதுச்சேரியில் சிகிச்சை பெற்று மாயக்கிருஷ்ணன் (48), சுந்தர்ராஜ் (40) இருவரும் சிகிச்சைப் பலனின்றி இன்று, புதன்கிழமை, உயிரிழந்துள்ளனர். 

மேலும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பவம்  தொடர்பில், பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது,

கடலூர் சிப்காட் வளாகத்தில் இயங்கிவந்த பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யப்படும் தனியார் தொழிற்சாலையில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த மெத்தனோலை, அங்கே பணிபுரியும் குமரேசன் (26) என்பவர் கொண்டுவந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தான் கொண்டுவந்த மெத்தனோலை போதை வஸ்துவாக மாற்ற அதில் தண்ணீர் கலந்து குமரேசன், சந்திரகாசம், மாயக்கிருஷ்ணன், சுந்தர்ராஜ் மற்றும் எழில்வாணன் அனைவரும் நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு அருந்தியுள்ளனர். 

இதனால், வேதிப்பொருளைப் பாதுகாக்கத் தவறிய தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. மேலும், அதனை எடுத்துவந்து விநியோகம் செய்ய குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58