டெங்கு, சிக்குன்குனியா போன்று கொரோனாவும் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கும் - மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ்

15 Apr, 2020 | 03:34 PM
image

டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ஒரு  சிரேஷ்ட உறுப்பினரான மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ், தடுப்பு மருந்து தயாரானதும் மூத்த பிரஜைகள் உட்பட சமுதாயத்தில இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கே அதை பயன்படுத்துவதில் முன்னுரிமை காட்டவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை மருத்துவ கல்லூரியின் பழைய மாணவரான அவர், கொவிட் - 19 நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் தன்னை பூரணமாகக் குணப்படுத்தி உயிரைக்காப்பாற்றியமைக்காக ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையை தெவிட்டுகிற அளவுக்கு புகழ்ந்ததாகவும் அரசாங்கத்தின் நிதியில் இயங்குகின்ற அந்த  சுகாதார சேவையின் புகழ் பெரிதும் உயர்ந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

உலகளாவிய ஆட்கொல்லி நோயான கொவிட் - 19 க்கு எதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து ' த இந்து ' பத்திரிகைக்கு செவ்வாயன்று நேர்காணல் ஒன்றை அளித்திருக்கும்  ராஜேஸ் பிரிட்டனின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே பெருமளவுக்கு விளக்கங்களை தந்திருப்பினும், பொதுவில் அவர் கூறியிருக்கும் விடயங்கள் எமக்கும் பயனுடையவையாக இருக்கும் என்பதால் சுருக்கமாக அவற்றை தருகிறோம்.

கொரோனாவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு (Lockdown) எவ்வாறு பயனுடையதாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, " முன்னென்றும் இல்லாத இந்த தொற்றுநோய் தொடர்பில் இதுவரையில் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய எந்த தீர்மானமும் இரு தன்மை கொண்டவையாக இருந்திருக்கின்றன. பொதுமக்கள் பாதுகாப்பும் பொருளாதார எதிர்விளைவும் இரு முக்கிய அக்கறைகளாக இருந்திருக்கின்றன. ஐக்கிய இராச்சியத்தில்  ஊரடங்கு முற்றுமுழதானதாக இருக்கவேண்டும் என்றும் மூன்று வாரங்களுக்கு பிறகு அது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் மார்ச் பிற்பகுதியில் நாம் ஒரு தீர்மானத்தை எடுத்தோம். பொதுச்சுகாதார நிபுணர்கள் சீனா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சிங்கப்பூரின் அனுபவத்தின் அடிப்படையில் மூன்று  வாரகால ஊரடங்கை சிபாரிசு செய்திருந்தார்கள்.

" நாம் பின்பற்றுவது மிகவும் எளிதான நடைமுறையாகும். 

முதல் படி ; காய்ச்சல், இருமல், தசைநோவு இருப்பவர்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும். வெரஸின்  உயர் தாக்கம் ஐந்து நாட்களுக்கு நீடிக்கிறது.ஆனால், இரண்டாவது உச்ச தாக்குதலுக்கும் நோயாளிகள் இலக்காகலாம் என்பதால் இருவார தனிமைக்காலத்தை நாம் சிபாரிசு செய்கிறோம். ஒரு வாரத்தில் நீங்கள் சுகமடைந்ததாக உணரக்கூடும். ஆனால்,தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள். தொற்றுத்தடுப்பு காவலில் உங்களுடன் வேறு எவராவது அல்லது உங்கள் குடும்பத்தவர்கள்  இருந்திருந்தால், இது அவர்களுக்கும் பொருந்தும். இரண்டாவது படி ; அதற்கு பின்னரும் நீங்கள் சுகவீனமுற்றிருந்தால் வைத்தியசாலைக்கு செல்லுங்கள்.தேசிய சுகாதார சேவையில் கொரோனாவைரஸுக்காக ( கொவிட் --19) நீங்கள் மருததுவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் " என்று விளக்கமளித்தார்.

கொவிட் அல்லாத நோய்களுக்கு சிகிச்சகைள்

இன்றைய கொவிட் -- 19 நோய் பாதிப்புக்காலத்தில் கொவிட் அல்லாத நோய்களுக்கான சிகிச்சைகள் / சத்திரசிகிச்சைகள் குறித்து ராஜேஸிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ; 

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் எத்தகைய நோயாளிகளுக்கு, எந்த எண்ணிக்கையில் முன்னுரிமை கொடுத்து சிகிச்சைகளை அளிக்கவேண்டும் என்பதை மதிப்பீடு செய்வதற்கு ஒரு முக்கியமான நடைமுறையை பின்பற்றுகிறோம். அதாவது, கொவிட் -- 19 பிரிவு, கொவிட் அல்லாத நோய்கள் பிரிவு என்று இரு பிரிவுகள் உள்ளன. முன்கூட்டியே திகதி குறிக்கப்பட்ட சத்திரசிகிச்சைகள் அதாவது அவசரமாக செய்யாவிட்டால் மருத்துவ பாதிப்பு எதுவும்  ஏற்பட்டுவிடாது என்று கருதப்படுகின்ற சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படவேண்டும் என்ற அபிப்பிராயம் இந்தியாவில் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறுவதற்கான காரணங்களும் இருக்கலாம். ஐக்கிய இராச்சியத்தில் கொவிட் --19 பரவல் தொடங்கிய பிறகு குறிப்பிட்ட சில மட்டங்களின் பிரகாரம் நாம் சத்திரசிகிச்சைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுத்திருக்கிறோம். முன்னுரிமையைப் பொறுத்தவரை, 1,2,3,4 என்று மட்டங்கள் உண்டு.

முன்னுரிமை மட்டம் 1 அவசர சத்திரசிகிச்சைகளை 24 மணித்தியாலங்களுக்குள் கட்டாயம் செய்யப்படவேண்டியவை என்றும் 72 மணித்தியாலங்களுக்குள் செய்யப்படவேண்டியவை என்று பிரிக்கப்படுகிறது. 

மட்டம் 2 இல் நோயாளி சத்திரசிகிச்சைக்காக நான்கு வாரங்கள் பொறுத்திருக்கலாம்.

மட்டம் 3 இல் சத்திரசிகிச்சைகளை மூன்று மாதங்களுக்கு தாமதிக்கலாம்.

மட்டம் 4 மூன்று மாதங்களுக்கும் கூடுதலாக  சத்திரசிகிச்சைகளை தாமதிக்கக்கூடிய நோயாளிகளைக் கொண்டதாகும். அவசரமான சிகிச்சைகள் எவை என்பதை அறிவுறுத்தி  மருத்துவத்துறையின் ஒவ்வொரு பிரிவுக்கும்  வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.   

ஐக்கிய இராச்சியத்தில் ஒவ்வொரு வைத்தியசாலையும் கொவிட் --19 அல்லாத சத்திரசிகிச்சைகளுக்காக ஒருசில தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதசெய்யவேண்டும். ஏனைய தியேட்டர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் விரிவாக்கங்களாக மாறியிருக்கின்றன.

கொவிட் --19 தியேட்டர்களில் விசேட மருத்துவ நிபுணர்கள், மயக்கமருந்து கொடுப்பவரகள், பொதுமருத்துவர்கள் இருப்பார்கள். ஆனால், தற்சமயம் எமது வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பிவழியவில்லை. ஏனென்றால் சனத்தொகையில் 90 சதவீதமானவர்கள் ஊரடங்கை கடைப்பிடித்துவருகிறார்கள்.

இந்தியாவில் ஊரடங்கு மிகவும் சிறந்த முறையில் நடைமுறையில் இருந்துவருகிறது. மத்திய அரசாங்க வைத்தியசாலைகளிலும் மாநில அரசாங்க வைத்தியசாலைகளிலும் உகந்த உட்கட்டமைப்புக்கள் உள்ளன. அசாமில் செய்யப்பட்டதைப் போன்று கொவிட் --19அல்லாத நோயாளிகளை தனியார் வைத்தியசாலைகளுக்கு பரவலாக பிரித்து அனுப்பவது குறித்து இந்திய அரசாங்கம் சிந்திக்கக்கூடும். 

கொவிட் --19 க்கான சிகிச்சைத் தெரிவுகள்

பிரசுரத்துக்கு முன்னதான (Pre--publication material) பெருவாரியான  தகவல்களை நாம் திரட்டிக்கொண்டிருக்கிறோம். தற்சமயம் நாம் செய்வது ஊகங்களின் அடிப்படையிலான செயன்முறைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் அதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவ்வாறு செய்துகொள்கின்றது. ஐக்கிய இராச்சியத்தில் நாம் ஒரு பரீட்சார்த்த அடிப்படையில் ஹைதரொக்சிகுளோறோகுயினை தொற்றுநோய் குணப்படுத்தும் மருந்துகளுடன் (Antibiotics) சேர்த்த பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம. ஏனென்றால் எது பயன்தரும் என்று திட்டவட்டமாக எமக்கு தெரியவில்லை. இதை வெளிப்படையாகவே  கூறுகிறோம்.

அதேவேளை, பி.சி.ஜி. சிலவகையான பாதுகாப்புப் பொறிமுறையை வழங்குகிறது போலத் தேரிகிறது.

ஆனால், ஐக்கிய இராச்சியத்தில் நாம் பிரதானமாக இடர்நிலைமையில் ஆதரவாக அமையக்கூடிய சிகிச்சைகளையே (Supportive treat meets) வழங்கிக்கொண்டிருக்கின்றோம். மற்றைய நாடுகளும் அதே  தவறுகளை இழைத்துவிடக்கூடாது எனமபதற்காக இந்த தொற்றுநோயின்போது தகவல்களை சுதந்திரமாக பரிமாறுவது மெச்சத்தக்க ஒரு விடயமாகும்.

ஊரடங்கின் தாக்கங்களை இன்னும் ஒரு வார காலத்தில் எம்மால் அறியக்கூடியதாக இருக்கும். இதுவரையில் நாம் கொவிட் --19 மரணங்களை மாத்திரம் பதிவு செய்துகொண்டிருக்கின்றோம். ஆனால், வைத்தியசாலைகளுக்குள் வராத வேறுபலரும்  இருக்கிறார்கள். மருத்துவசோதனைக்குஉட்படுத்தும்போது  கொவிட் -- 19 க்கு நெகட்டிவ் காண்பிக்காத ஒவ்வொருவரும் அதன் தொற்றுக்குள்ளாகியிருககிறார்கள் ( பொசிட்டிவ் ) என்பதே இப்போது  அனுமானமாக இருக்கிறது.

அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்க மக்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவினராக விளங்குவதாக செய்திகள் வெளியாகின்றன. அதையொத்த ஒரு நிலையை ஐக்கிய இராச்சியத்தில் காண்கிறீர்களா என்று ராஜேஸிடம் ' த இந்து ' செயதியாளர் இறுதியாக கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு அவர், " ஐக்கிய இராச்சியத்தில் பணியாற்றும் வெளிநாட்டு டாக்டர்கள் மத்தியில் குறிப்பிட்ட ஒரு தலைப்பட்ச மனச்சாய்வு இருப்பதை நாம் அவதானிக்கிறோம். இந்த தொற்றுநோயின்போது தேசிய சுகாதார சேவை டாக்டர்கள் மற்றும் தாதியர் மத்தியில் 39 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், சூடான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளைச் சேரந்தவர்களும் இதில் அடங்குகிறார்கள்.

" ஒன்று மாத்திரம் எனக்கு நிச்சயம்.டெங்கு , சிக்குன்குனியா போன்று கொவிட் -- 19 தொற்றுநோயும் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கப்போகிறது. ஐக்கிய இராச்சியத்தில் குளிர்காலங்களில் அது தகைாட்டும். அதற்கு தடுப்புமருந்துகள் தயாரானதும் சிரேஷ்ட பிரஜைகள் உட்பட சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் பிரிவினருக்கு முன்னுரிமை கொடுத்து அந்த மருந்துகளை வழங்குமாறு சிபாரிசுகள் செய்யப்படலாம்" என்று பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04