சுகாதார அமைச்சுடன் இணைந்து வீடியோ முறையிலான Telemedicine வசதியை உருவாக்கியுள்ள டயலொக்

Published By: Digital Desk 3

15 Apr, 2020 | 03:17 PM
image

நாட்டில் நிலவும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சுகாதார அமைச்சின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு இந்த தருணத்தில், நோய் தொற்றின் அபாயத்தை குறைப்பதற்காக வைத்தியர்கள் அருகில் செல்லாமல் தொலைவில் இருந்து அவதானிக்கக்கூடிய கெமராக்கள், WiFi ரவுட்டர்கள்,  சாதாரண தொலைபேசிகள், மற்றும் CDMA  தொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த இணைப்புத் தீர்வுகள் தொற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைப்பதற்காக நன்கொடையாக வழங்கப்பட்டன, மேலும் கோவிட் -19 மேலும் பரவுவதை எதிர்ப்பதற்காக செயல்படுத்தப்பட்ட அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மருத்துவ ஊழியர்களை மேலும் ஆதரிக்கின்றன.

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு இந்த உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. கேமரா அமைப்புகள் மற்றும் WiFi ரவுட்டர்கள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை மருத்துவர்கள் எளிதாக கண்காணிக்க முடியும். மேலும், அவசரகால சூழ்நிலைகளில் செயல்பாடுகளை கையாள வசதியாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுக்கு நிலையான தொலைபேசிகள் வழங்கப்பட்டன.

இலங்கை மருத்துவ சங்கத்திற்கு (SLMA) ஒரு SMS  தளத்தின் மூலம் இலங்கை மருத்துவ சங்கத்தில் இருக்கும் வைத்தியர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொடர்பான அவசர தகவல்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கிடையிலான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். 

 இந்த நன்கொடை, தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் சேருவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக டயலொக் ஆசிஆட்டாவின்  மற்றொரு முயற்சியாகும்.

மேலும் இலங்கையில் உள்ள 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள், பாதுகாப்பாக வீட்டில் இருந்த படியே   எப்போதும் இணைந்திருப்பதனை  உறுதிசெய்யும் முயற்சிகளில் ஒன்றாக அணுகக்கூடிய பலவிதமான e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) வழங்குகின்றது.

படத்தில் இடமிருந்து வலம் : டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும நிலை பேண்தகு பிரிவு சிறப்பாளர் ஜெயராஜசிங்கம் ஐங்கரராஜ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும நிலை பேண்தகு பிரிவு தலைவர் சரித ரத்வத்த, பனதுரா அடிப்படை மருத்துவமனை வைத்தியர் டாக்டர் லசித் எதிரிசூரிய, பொது சுகாதார சேவைகள், சுகாதார அமைச்சகத்தின்  இயக்குனர் - வைத்தியர் அனில் ஜாசிங்க, கெளரவ அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அமைச்சரின் தனியார் செயலாளர் காஞ்சன ஜயரத்ன, மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57