ஊரடங்கை மீறிய 26 ஆயிரத்து 830 பேர் கைது : 7000 வாகனங்கள் பறிமுதல்

Published By: Digital Desk 3

15 Apr, 2020 | 01:05 PM
image

(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 26  நாட்களுக்குள் 26 ஆயிரத்து 830 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 7000 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடியமை, சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விநியோகம், அத்தியவசியசேவை எனக்கூறி போலியாக செயற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பிலே அதிகளவானோர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் மக்கள் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம்,கொழும்பு,கம்பஹா,களுத்துறை,கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும், இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும்  மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  இவை தவிர்ந்த ஏனையப்பகுதிகளுக்கான ஊரடங்கு நாளை காலை ஆறு மணிக்கு  தளர்த்தப்பட்டு மீண்டும்  பிற்பகல் 4 மணிக்கு அமுல் படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்களிடமிருந்து215  வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 26 நாட்களுக்குள் மாத்திரம் 26 ஆயிரத்து 830 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்,கார், முச்சக்கரவண்டி மற்றும் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட  7000 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அவை வைரஸ்  தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னரே உரிய நபர்களுக்கு கையளிக்கப்படும்.இதேவேளை குறித்த வாகனங்கள் தொற்று நீக்கம் தொடர்பான போக்குவரத்து செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58