கேகாலை - கண்டி வீதியில் பள்ளபானே பகுதியில் வேன் ஒன்று தனியார் பஸ்வுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானதோடு 12 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.