பேருவளையில் கொரோனா அச்சம் ! இரு கிராமங்கள் முற்றாக முடக்கம் !

Published By: J.G.Stephan

14 Apr, 2020 | 07:30 AM
image

பேருவளை, பன்வில மற்றும் சீனக்கொரோட்டுவ கிராமம் ஆகியவை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் கொரோனா அச்சம் நிலவுவதால் இவ்வாறு முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றையதினம் கொரோனா வைரஸ்  குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக 14 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு, புனாணையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  அவர்கள் அனைவரும் களுத்துறை மாவட்டம் - பேருவளை பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அங்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்திருந்தது.

பேருவளையில் இருந்து புனாணை தனிமைப்படுத்தல் முகாமுக்கு 219 பேர் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந் நிலையிலேயே அந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி தற்போது அங்கு  கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பேருவளை பகுதியில் உள்ள பன்வில மற்றும் சீனக்கொரோட்டுவ கிராமம் ஆகியவற்றை முற்றாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55