சமூக இடைவெளி தற்காப்பு உத்தியா?

13 Apr, 2020 | 08:27 PM
image

உலகம் முழுவதும் மக்கள் கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் ஒருவரிடமிருந்து பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று, இன்று ஒரு மில்லியன் மக்களை கடந்து பரவிக்கொண்டிருக்கிறது. அத்துடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை  உயிர் பலி வாங்கியுள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதற்கான சாத்தியமும் குறைவாகவே இருப்பதால், பாதிப்பின் எண்ணிக்கையும், இறப்பின் எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கலாம் என்ற கவலையுடன் உலகம் இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொற்று அதிகரிக்கும் வழியிலிருந்து தற்காத்துக் கொள்வது தான் எமக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு கவசம். அதனால் தான் அரசாங்கம் சமூக இடைவெளி (Social Distancing)யை கடைப்பிடிக்குமாறும், வீட்டிற்குள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. இத்தகைய அணுகுமுறை, ஒவ்வொரு மக்களின் உயிரைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது. 

இதனை ஒருவர் அலட்சியமாகவோ அல்லது அறியாமையின் காரணமாகவோ மீறினாலும் இதன் ஒட்டுமொத்த நோக்கமும் சிதைந்துவிடும். இதனால்தான் அரசு விடுத்த சமூகவிலகல்  மற்றும் சமூக இடைவெளி என்ற கோரிக்கையை  ஊரடங்கு உத்தரவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டாயமாக கடைப்பிடிப்பது தான் குடிமக்களாகிய எம்முடைய கடமை. 

அத்துடன் மனிதநேயமும், மனிதாபிமானமும் எம்மிடம் இருக்குமானால் இதனை உறுதியாக பின்பற்ற வேண்டும். மனிதர்கள் சமூக விலங்காகவே வாழ பழகிக்கொண்டவன் என்றாலும், தற்போதைய சூழலில் சமூக இடைவெளியை உறுதியாக அனுஷ்டிக்கவேண்டும். ஏனெனில் இந்தத் தொற்று ஒரே ஒரு நபரிடமிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபருக்கு தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதை ஆய்வு மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் சமூக விலகலையும், சமூக இடைவெளியையும் உறுதியாக பின்பற்றுவோம்.

இதற்கு மாற்று மருத்துவமான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் என்ற மருந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிக்கன்குனியா என்ற நோய் பரவல் இருக்கும்பொழுது நிலவேம்பு குடிநீர் என்பது சரியான நிவாரணமாக இருந்தது. தற்போது சித்தமருத்துவம் சரியானதொரு மருந்தை பரிந்துரை செய்திருக்கிறது. அத்துடன் கபசுர குடிநீர் அருந்துவதால் மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, நோயை வராமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் சித்த மருத்துவம் விளக்கமளிக்கிறது. 

எனவே கொரோனா என்ற இந்த வைரஸ் தொற்றை பரவாமல் தடுப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கும் பரிந்துரைகளையும், அறிவுரைகளையும் உறுதியாக பின்பற்றுவோம். தனித்திருப்போம். விழித்திருப்போம். சமூக இடைவெளியையும் உறுதியாக பின்பற்றி, தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்வோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36