கொரோனா நெருக்கடியிலிருந்தும் மீண்டெழுவோம் : எம்மையும் உலகையும் காப்போம் - சந்திரகுமார்

Published By: J.G.Stephan

13 Apr, 2020 | 08:41 AM
image

கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நாம் மீண்டெழுவதோடு, எம்மையும் உலகையும் காத்துக்கொள்ளவேண்டும் அத்தோடு இந் நெருக்கடியான  சூழ்நிலையில்  முன்வந்து உதவிப் பணிகளில் ஈடுபடுவோருக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ளவதாக சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோரின் மரணத்தைத் துயரத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகெங்கும் இலட்சக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்கிலக்காகி உயிராபாயத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

வளர்ச்சியடைந்த நாடுகள், வல்லரசுகள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று என்பது எமக்கும் அது பெரிய அச்சுறுத்தலாகவும் பேரபாயமாகவும் உள்ளது.

இதனை எதிர்கொள்வது, இதிலிருந்து மீள்வது, இது உண்டாக்கும் நெருக்கடிகளை முறியடிப்பது எல்லாமே எமது தவிர்க்க முடியாத பொறுப்பாக உள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, உரிய மருத்துவ ஏற்பாடுகளைச் செய்வதும் மக்களுக்கான உணவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதுமே உடனடிச் சாத்தியமானவை.

ஏனைய பொறுப்புகள் மக்களுக்கும் நாட்டிலுள்ள ஏனைய தரப்பினருக்கும் உரியவையாகும். மக்களுடைய முழுமையான ஒத்துழைப்பின் மூலமே இந்த பேராபயத்தை முறியடிக்க முடியும். ஏனென்றால் இது ஒரு தேசிய நெருக்கடியாகவும் உலகளாவிய நெருக்கடியுமாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் எல்லோரும் பேதங்களை மறந்து இந்தப் பொது நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும்  ஊரடங்கு உத்தரவை எமது சுய பாதுகாப்புக்கும் சமூகப் பாதுகாப்புக்குமான ஏற்பாடு என உணர்ந்து அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டு செல்வதாகவே உள்ளது.

தினமும் நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். அதுவரையிலும் நாம் ஒவ்வொருவரும் பேரபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு செயற்படுவோமாக இருந்தால் இந்தத் தொடர் ஊரடங்ளையும் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் விரைவில் இல்லாதொழிக்க முடியும்.

மிக வேகமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பக் கூடியதாகவும் இருக்கும். இல்லையேல் தொடர்ந்தும் இயல்பு வாழ்வை இழந்த மக்களாக, ஊரடங்கு வாழ்விற்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டிய மக்களாகவே இருக்க வேண்டி வரும்.

இது உலகமெங்கம் ஊரடங்கி, வீடடங்கி இருக்கும் காலம் என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். ஏற்கனவே யுத்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் மிகக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த எமக்கு இது இன்னொரு நெருக்கடியாக – இரட்டிப்பு நெருக்கடியாக வந்திருக்கிறது.

இதை முறியடித்தாலே நாம் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். ஆகவே இதை எமது மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு பொறுப்போடு செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது ஒவ்வொரும் மிக மிக அவதானமாகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டிய காலகட்டமாகும்.  

எமது மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று அபாயம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது ஓரளவுக்கு ஆறுதலளிக்கும் சேதியாகும். ஆனால் இந்த நிலை நாடு முழுவதலும் உருவாகினால்தான் நாம் முழுமையான இயல்பு நிலையை எட்ட முடியும்.

இந்த நிலையில் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தலில் இருப்பதோடு சுய பொருளாதார விருத்தியிலும் ஈடுபடுவோம். உணவு உற்பத்தி தொடக்கம் சுய தொழில் முயற்சிகளில் முழுமையான ஈடுபாட்டைக் கொள்வோம். எமக்கு கிடைத்திருக்கும் நேரத்தை எமது எதிர்காலத்துக்காகவும் எமது சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் பயன்படுத்திக் கொள்வோம்.

இதேவேளை எமது பிரதேங்களில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் இடர்காலக் களப்பணிகளை ஆற்றி வருகின்றனர். தமது சுய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் உள்ள நிலையிலும் இந்தப் பணியில் (உணவு மற்றும் அவசிய தேவைப்பொருட்களை வழங்குதல்) ஈடுபட்டுக்கொண்டிருப்போருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இந்த மனிதாபிமானப் பணி என்பது எமது சமூகத்துக்கான பாதுகாப்பையும் உயிரோட்டத்தையும் வழங்குவதாகும். எனவே இந்த மகத்தான பணியில் ஈடுபடுவோரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

அத்துடன் நெருக்கடி மிக்க இந்தக் கால கட்டத்தில் உணவு மற்றும் பிற அவசியத் தேவைகளை நிறைவேற்றி வரும் சிறு வர்த்தகர்கள், கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், பனை தென்னை வள தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த முறையில் பணியாற்றுவதைப்போல ஒவ்வொரு தரப்பினரும் சூழலின் தாற்பரியத்தை உணர்ந்து கொண்டு பொறுப்பாக நடந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதையிட்டு நாம் நிறைவடைகிறோம்.

ஏனைய தேவைகள், இடர்ப்பாடுகள் குறித்து நாம் கவனமெடுத்துச் செயற்படுகிறோம். எமது மக்களின் தேவைகள், பிரச்சினைகளைக் குறித்து தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டு பேசி அவற்றுக்கான நல் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

அதைப்போல மாவட்டங்களின் நிர்வாக நடவடிக்கைகளிலும் மக்கள் நலன் குறித்த வகையில் எமது பங்களிப்பைச் செய்து வருகிறோம். இந்த வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கான எமது பணிகள் முதன்மையிடத்தில் உள்ளன.

எனவே நாம் மிக விரைவில் எம்மைச் சூழ்ந்திருக்கும் கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்டு புதிய முறையில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம். இந்த நம்பிக்கையை வெற்றியடைய வைப்பது மக்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

பொறுப்பாகும். இது ஊர் கூடி, உலகம் கூடி இழுக்கும் தேராகும். அதில் எமது கைகளும் எப்போதும் சேர்ந்திருக்கும் என வெளிப்படுத்திக் கொள்கிறோம்.கொரோனா நெருக்கடியிலிருந்தும் மீண்டெழுவோம். எம்மையும் உலகையும் காப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34