மரணத்திற்கு அருகில் சென்றார் பொறிஸ்ஜோன்சன்- ஒரு வாரத்தில் நடந்தது என்ன ? வெளியாகின புதிய தகவல்கள்

Published By: Rajeeban

12 Apr, 2020 | 04:57 PM
image

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மரணத்திற்கு அருகில் சென்றார் என மெயில் ஒன் சன்டே  செய்தி வெளியிட்டுள்ளது.

மெயில் ஒன் சண்டே மேலும் தெரிவித்துள்ளதாவது.

பொறிஸ்ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே சென் தோமஸ் மருத்துவமனையின் மருத்துவர்களும்  தாதிமார்களும் அவரிற்காக காத்திருந்தனர்.மூன்று நாட்களிற்கு முன்னரே அவர்கள் காத்திருந்தனர். ஆனால் பிரதமர் தேசிய சுகாதார சேவையினருக்கு பாராட்டும் தெரிவிக்கும் வகையில் கைதட்டுவதை தொலைக்காட்சியில் பார்த்த அவர்கள் குழப்பமடைந்தனர்.

பிரதமர் எந்நேரத்திலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என முகாமையாளர்கள் அறிவித்ததை தொடர்ந்து கையுறைகளை அணிந்தவாறு மருத்துவர்கள் அவரிற்காக காத்திருந்தனர்.

ஆனால் அன்றைய தினம்இரவு 8 மணிக்கு பிரதமர் பிரதமர் தேசிய சுகாதார சேவையினருக்கு பாராட்டும் தெரிவிக்கும் வகையில் கைதட்டுவதை தொலைக்காட்சியில் அவர்கள் பார்த்தனர்.

பிரதமர் பொறிஸ்ஜோன்சன் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு மார்ச்27 ம் திகதி வெளியான பின்னர் அவரது நோய் அறிகுறிகள்  என தகவல்கள் வெளியாகின.

ஆனால் ஏப்பிரல் இரண்டாம் திகதி இரவு கொவிட் 19- யுத்த அமைச்சரவையின் கூட்டத்தி;ல் கலந்துகொண்ட பின்னர் பொறிஸ்ஜோன்சன் சிரமப்பட்டார்.

தொடர்ச்சியாக தன்னால் இருமல்களை கட்டுப்படுத்த முடியாமலுள்ளது,காய்ச்சலும் காணப்படுகின்றது என தெரிவித்த பொறிஸ்ஜோன்சன் தனது ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலை மறுநாள் முடிவிற்கு கொண்டுவர முடியாது என தெரிவித்துள்ளார்.

தனது மருத்துவர் தனது அந்தரங்க செயலாளர் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் தனது பணிகளை அதிகளவிற்கு குறைப்பதற்கு இணங்கியுள்ளார்.

தனக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக கருத்து உருவாகலாம் என கருதிய பொறிஸ்ஜோன்சன் மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார் என  அலுவலக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் மருத்துவர்களின் ஆலோசனை காரணமாகவே அவர் அவ்வாறு வற்புறுத்தினார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏப்பிரல் இரண்டாம் திகதி அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது,அதன் பின்னர் சனிக்கிழமை காலை அவரது நோய் அறிகுறிகள் குறித்து மீண்டும் மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.

ஆனால் அவர் முன்னரே மருத்துவமனைக்கு சென்றிருக்கவேண்டும்,என அவரது சகாக்களும், நண்பர்களும்,அமைச்சர்களும் தெரிவிக்கின்றனர்.

அந்த வாரம் முழுவதும் அவர் மோசமான நிலையில் இருந்தார் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்தோமஸ் மருத்துவமனையின் மருத்துவர்களும் பணியாளர்களும் முழுமையான பாதுகாப்பு உடைகளுடன்  வாசலில் காத்திருந்தவேளையே பிரதமர் வரமாட்டார் என்ற செய்தி அவர்களிற்கு தெரிவிக்கப்பட்டதாக தேசிய சுகாதார சேவையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய சுகாதார சேவையின் தலைமை அதிகாரிகள் மிக தெளிவான திட்டமொன்றை பிரதமரிற்காக வகுத்துள்ளனர்.

பிரதமர் மூடப்பட்ட பகுதிகள் ஊடாக இரகசிய பாதையொன்றை பயன்படுத்துவார் அதன் பிறகு 12 தளத்தில் உள்ள மஜிக் அறைக்கு கொண்டு செல்லப்படுவார் என்பதே அந்த திட்டம்.

அவரது மருத்துவ ஆவணங்களை குறிப்பிட்ட சில மருத்துவர்களை தவிர வேறு எவரும் பார்க்க முடியாததை உறுதி செய்வதற்காக விசேட கணணி அமைப்பொன்றை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் ஏப்பிரல் நான்காம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது பொறிஸ்ஜோன்சனின் நிலைமை மோசமடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

அன்று மதியமளவில் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை உறுதியானது.

மருத்துவமனைக்கு வந்தவேளை பிரதமர் சுயநினைவுடன் இருந்தார்,ஆனால் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பத்தாவது நிமிடத்தில் அவரிற்கு ஒக்சிசன் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் செயல் இழந்துள்ளமை குறித்து மக்களிடமிருந்து வரக்கூடிய எதிர்வினைகளை கருத்தில் கொண்டு பிரதமர் அலுவலகம் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

அவர் தொடர்ந்தும் மருத்துவமனையிலிருந்து  பணியாற்றுவார் எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் உண்மையில் அவரது நிலைமை ஞாயிற்றுக்கிழமை மாலையும் திங்கட்கிழமையும் மோசமானதாக மாறியுள்ளது.

திங்கட்கிழமை அளவில் அவர் தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்த முடியாத குறுஞ்செய்திகளிற்கு பதில் அளிக்க முடியாத நிலையில் காணப்பட்டுள்ளார்.

பிரதமர் நல்ல உணர்வுகளுடன் காணப்படுகின்றார் என டொமினிக் ரப் நாட்டிற்கு உத்தரவாதம் அளித்து சில நிமிடங்களில் பொறிஸ்ஜோன்சனின் மருத்துவர்களிடமிருந்து அவரது காதலிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

மருத்துவர்கள் ஒக்சிசன் சிகிச்சை வழங்கப்பட்ட பின்னரும் அவரது நிலைமையில் முன்னேற்றமில்லை அவரிற்கு செயற்கை சுவாசம் வழங்கவேண்டிய நிலையேற்படலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியால் கடும் மன உளைச்சலிற்குள்ளான பொறிஸ்ஜோன்சனின் காதலி அவரிற்கு காதல் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன் வயிற்றில் உள்ள குழந்தையின் ஸ்கான் செய்யப்பட்ட படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை பிரதமரை வேறு தளத்தில் உள்ள தீவிர கிசிச்சை பிரிவிற்கு மாற்றுவதில்  பிரச்சினைகள் எழுந்துள்ளன.

அவ்வளவு முக்கிய நோயாளியை மாற்றுவதற்கு பாரிய நடவடிக்கைகள் அவசியம் இதறகு அவசியமாகயிருந்தது என மருத்துவமனை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த செய்தியை கேட்டு பிரதமர் அலுவலக பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எவ்வளவு வேகமாக விடயங்கள் இடம்பெற்றன என்பது அச்சமடைய வைத்தது,என்னால் அதனை நம்பமுடியவில்லை என சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் ஏற்கனவே கதைத்திருந்த அவரது அந்தரங்க செயலாளர் உடனடியாக விடயத்தை பங்கிங்காம் அரண்மணைக்கு விடயத்தை தெரிவித்துள்ளார்.

டொமினிக் ராப் உடனடியாக அழைக்கப்பட்டுள்ளார் அவர் அமைச்சரவையின் தலைமை அதிகாரிகளிற்கு நிலைமைய தெளிவுபடுத்தியுள்ளாhர்.

அதேவேi பிரதமரின் பேச்சாளர் அறிக்கையொன்றை தயாரித்துள்ளார், பிபிசிகுழுவினர்  குழப்பமடைந்தவராக காணப்பட்ட ராப்பின் அறிக்கையை படம்பிடித்துள்ளனர்.

அது பிரதமர் குறித்த பிரார்த்தனைகள் மாத்திரம் காணப்பட்ட  இரவு என அதிகாரியொருவர் குறிப்பிட்டார்,

தேசம் குழப்பத்தில் காணப்பட்டவேளை எதிர்பார்த்ததை விட பொறிஸ்ஜோன்சனின் நிலை திங்கட்கிழமை  இரவு சிறப்பானதாக காணப்பட்டது, செவ்வாய்கிழமை காலை அவரது காய்ச்சல் குறையத்தொடங்கியது.

வெள்ளை மாளிகை பொறிஸ்ஜோன்சன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை தொடர்புகொண்டுள்ளது,எனினும் மருத்துவமனை அதனை பணிவாக மறுத்ததுடன் வெளிவிவகார அமைச்சினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டது,

சீனாவும் மருந்துகளை வழங்க முன்வந்தது.

முதலில் வெள்ளை மாளிகை தொலைபேசியில் அழைத்து பிரதமரிற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவரை அனுப்புவதாக வேண்டுகோள் விடுத்தது, பின்னர் சீனா அரசாங்கத்தின் சார்பில் தொடர்புகொண்ட சீனாவின் மருந்து நிறுவனங்கள் மருந்துகளை அனுப்ப முன்வந்துள்ளன.

எனினும் இந்த வேண்டுகோள்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை பிரதமரை எங்களால் குணப்படுத்த முடியும் தேசிய சுகாதார சேவை மிகச்சிறந்த கிசிச்சை வழங்குகின்றது என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52