இந்தோனேசியாவிலிருந்து வந்து மறைந்திருந்த ஐவர் உட்பட 12 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு!

12 Apr, 2020 | 03:22 PM
image

பதுளையில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த பன்னிருவர் தியத்தலாவை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்று மாலை (11.04.2020) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் இந்தோனேசியா நாட்டிற்குச் சென்று கடந்த 28ம் திகதி நாடு திரும்பி தத்தமது சொந்த இடங்களான பதுளையில் ஹப்புவத்தை, பிங்கராவ, பதுளை ஆகிய இடங்களில் தத்தம் வீடுகளில் மறைந்திருந்தனர்.

இது குறித்து பதுளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பகுதி பொதுச் சுகாதாரப் பிரிவினருடன் பொலிசார் இன்று குறிப்பட்ட வீட்டாரை விசாரணை செய்த போது அவர்களில் நால்வர் இந்தோனேசியா நாட்டிற்குச் சென்று நாடு திரும்பி மறைந்து வாழ்ந்தவர்களென்று தெரிய வந்துள்ளது.

அத்துடன் அவ்விசாரணையின் போது பதுளையிலிருந்து ஐந்து பேர் இந்தோனேசியா சென்று நாடு திரும்பிய போதும் நால்வர் மாத்திரமே பதுளைக்குத் திரும்பியதாகவும் மற்றொருவர் ஹொரவப்பொத்தானையில் உள்ள தமது புதல்வனின் இல்லத்திற்குச் சென்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஹொரவப்பொத்தானை பொலிஸாருக்கும் அப்பகுதி சுகாதாரப் பிரிவினருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

உடனடியாகச் செயற்பட்ட ஹொரவப்பொத்தானை பொலிஸார் மறைந்திருந்த குறிப்பிட்ட நபரைக் கண்டுபிடித்ததுடன் அவருடன் சேர்த்து மேலும் நால்வரை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

பதுளையில் மூன்று இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பன்னிருவர் மாத்திரம் தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் ஹொரவப்பொத்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐவரும் அப்பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் ஹொரவப்பொத்தானைக்குச் சென்ற நபர் பதுளை பசறை வீதி மூன்றாம் மைலைச் சேர்ந்தவராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04