அடுத்த அமெரிக்க ஜனாதிபதியை கொரோனாவே தெரிவுசெய்யும்

12 Apr, 2020 | 01:14 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியை முடிவுக்கு கொண்டுவருவதாக பார்னி சாண்டேர்ஸ் அறிவித்துவிட்ட நிலையில், அந்த கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கே தான் முகங்கொடுக்கப்போகிறார் என்பது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு தெரியும். இந்த தேர்தலில் கொவிட்-19 நோய் மூன்றாவது வேட்பாளராக இருக்கக்கூடும்.

அமெரிக்கத் தேர்தல் நவம்பர் மாதத்துக்கு முன்னர் நடைபெறப்போவதில்லை. 7 மாதங்கள் என்பது அரசியலில் ஒரு நீண்டகாலம். மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படக்கூடிய சாத்தியப்பாடு ட்ரம்பைப் பொறுத்தவரை ஒருபோதும் உத்தரவாதப்படுத்தப்படவில்லை.அமெரிக்க தேர்தல் மன்ற முறையில் (Electoral college system  ) வெற்றியோ தோல்வியோ பத்துக்கும் குறைவான மாநிலங்களினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.கொரோனாவைரஸ் நெருக்கடி தொடக்கத்தில் மக்கள் மத்தியில் ட்ரம்புக்கு செல்வாக்கை அதிகரித்ததை காணக்கூடியதாக இருந்தது.

தங்களது  நாடுகளை  நெருக்கடிகள் பாதிக்கும்போது பெரும்பாலான உலக தலைவர்களின் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கின்ற தோற்றப்பாட்டின் வழியிலானதே ட்ரம்புக்கான இந்த செல்வாக்கு அதிகரிப்பு.ஆனால், நம்பகத்தன்மையான ஆட்சிமுறையும்  உறுதியான தலைமைத்துவமும் இருந்தால் மாத்திரமே அந்த அதிகரிப்பு நிலையானதாக இருக்கமுடியும்.ஆனால், இந்த இரு பண்புகளையும் கொவிட் -- 19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கான  ட்ரம்பின்  அணுகுமுறையிலோ அல்லது ஒழுங்காக திட்டமிடப்படாத செயற்பாடுகளிலோ காணவில்லை.

அமெரிக்காவில் கொவிட் 19 தொடர்ந்து வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.தற்போது வைரஸுக்கு பலியாகிக்கொண்டிருக்கும்  அமெரிக்கர்களில் பெரும்பகுதியினர் வடக்கு -- கிழக்கு மற்றும் பசுபிக் கரையோர மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் சிறுபான்மையினத்தவர்களாகவுமே அளவுக்கொவ்வாத முறையில்  இருக்கிறார்கள்.

இவையெல்லாம் ஜனநாயக கட்சியின் செல்வாக்குமிகுந்த மாநிலங்களாகும்.தெற்கிலும் மத்திய மேற்கு பிராந்தியங்களிலும் வைரஸ் அதன் அட்டூழியத்தை ஆரம்பித்து பெரிய நகரங்களுக்கும் அப்பால் பரவும்போதுதான் அதாவது, ட்ரம்புக்கு இன்னமும் விசுவாசமாக இருக்கும் வாக்காளர் தளத்தை பாதிக்கும்போது அவருக்கு உண்மையான சோதனை ஆரம்பமாகும்.இது விரைவானதும் விஞ்ஞானரீதியில் சந்தேகத்துக்குரியதுமான நடவடிக்கைகளிலும் சீனாவையும் உலக சுகாதார நிறுவனத்தையும்  தாக்கிப்பேசுவதிலும் ட்ரம்ப் நிருவாகத்துக்கு இருக்கின்ற ஒரு பிரமையை தெளிவுபடுத்தும்.

தபால் வாக்குச்சீட்டுக்களின் செல்லுபடித்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது போன்ற வாக்காளரை ஒடுக்கும் தந்திரோபாயங்களை குடியரசு கட்சி பயன்படுத்துவதையும் தெரியவைக்கும். அமெரிக்காவில் வைரஸ் தொற்று இன்னும் ஒரு சில வாரங்களுக்கு உச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. கொவிட் --19 க்கு பின்னரான மருத்துவ மற்றும் பொருளாதார நிலைவரங்களே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் என்பதை உண்மையில் தீர்மானிக்கும்.

  ( இந்துஸ்தான் ரைம்ஸ் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54