உலக தலைமைத்துவத்திற்கும் சவாலை ஏற்படுத்தும்  சீனா ! 

12 Apr, 2020 | 10:14 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொவிட்19 வைரஸ் பரவல் அனைத்துலக பொருளாதாரத்தையும் கடும் வீழ்ச்சிக்குள் தள்ளிவிட்டுள்ளது. இந்த நிலைமையானது உலகமயமாக்களின் பாதாக நிலையை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது தன்னிறைவு பொருளாதாரத்திலிருந்து முழு அளிவில் உலகமயமாக்கல் பொருளாதாரத்தை உள்வாங்கிய உலக நாடுகள் அனைத்துமே இன்றைய சூழலில்  செய்வதறியாதுள்ளது. 

ஏனெனில் முடக்கப்பட்ட நாட்டிற்குள் எவ்வாறு உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். ஏற்றுமதி பொருளாதாரத்தை மேற்கொள்ள முடியும் அல்லது தமது நாட்டிற்கு தேவையான பொருட்களை அந்நிய நாடுகளிலிருந்து எவ்வாறு இறக்குமதி செய்வது என்று அனைத்து வகையிலுமே நாடுகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்த நிலையிலேயே இலங்கையும உள்ளது.

இலங்கை உட்பட உலகின் பல நாடுகள் 1970 களுக்கு முன்பதான காலப்பகுதியில் ஒரு தன்னிறைவான பொருளாதாரத்தையே கொண்டிருந்தன.  அதன் பின்னர் உலக நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட பல்துறை சார் உறவுகள் மற்றும் தொழில் நுட்ப சார் வளர்ச்சிகள் என்பன காலப்போக்கில் உலகமயமாக்களை நோக்கி அனைத்து நாடுகளையும் கொண்டுச் சென்றது. அந்நிய நேரடி முதலீட்டை மையப்படுத்தியதாகவே உலகமயமாக்கல் பொருளாதாரம் காணப்படுகின்றது. இதற்குள் தான் ஏற்றுமதி - இறக்குமதி பொருளாதாரமும் உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது முழு உலகையும் முடக்கியுள்ள கொவிட்19 வைரஸ் தாக்கத்தினால் பல நாடுகளின் பொருளாதாரம் சூன்ய நிலைக்குள் சென்றுள்ளது.

வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டாலும் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பற்றாக்குறை போன்று பாரதூரமான விளைவுகளை உலக நாடுகள் சந்திக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் பொருளாதார தலைமைத்துவத்தை நோக்கிய போராட்டத்திற்குள் முக்கிய நாடுகள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இதற்குள் யார் வல்லரசு என்ற போட்டியும் ஏற்படும் . 2001 ஆம் ஆண்டு உலக வர்த்தக ஒன்றியத்தில் சீனா இணைவதற்கு முன்பதாக, குறிப்பிட்ட நாடுகளுக்கிடையில் மாத்திரமே சீன ஏற்றுமதிகள் காணப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறு அல்ல. அனைத்துலக நாடுகளிலும் சீன ஏற்றுமதிகள் தாராளமயபோக்கில் காணப்படுகின்றன. 

உலக வர்த்தக ஒன்றியத்தில் சீனா இணைந்து கொண்ட பின்னர் அதன் ஏற்றுமதி முதல் 5 ஆண்டுகளுக்குள் 30 மடங்காக அதிகரித்தது. இன்றைய காலப்பகுதியை எடுத்துக் கொண்டால் சீனாவின் பொருளாதார வேர் ஊண்டாத நாடுகள் இல்லை என்றே சொல்ல கூடியதாக உள்ளது.  ஆனால்  சீனாவில் அந்நிய நாடுகளின் முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த ஒரு சூழல் அனைத்துலகிற்குமான   அனைத்து உற்பத்திகளை வழங்க கூடிய நிலைக்கு சீனா தன்னை சூட்சமமாக வளர்த்துக் கொள்வதற்கு அடிப்படையாகியது.

இறக்குமதிகளை குறைத்து ஏற்றுமதிகளை அதிகரித்து அதனை அனைத்து உலக நாடுகளுக்கும் வியாபிப்பதை சீனா மிக சூட்சமமாக முன்னெடுத்து வந்தது. இதனால்  2017 ஆண்டிலிருந்து சீன - அமெரிக்க பொருளாதார உறவின் பணிப்போர் தீவிரமடைய தொடங்கியது. கூடுதல்  அமெரிக்க உற்பத்திகளை சீனாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம் முன் வைத்ததுடன் அவ்வாறு இல்லையென்றால் பொருளாதார தடையை விதிப்பதாகவும் அறிவித்தார். 

இவ்வாறிருக்கையில் சீன ஜனாதிபதி ஜி ஷின்பிங் இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போதும் இந்திய உற்பத்திகளுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அந்தவொரு விடயத்திலிருந்து சீனா மாறுவதாக இல்லை. மேலும் சீனாவை பொறுத்தவரையில் தொழின்மை மற்றும் உற்பத்திகளுக்கு பற்றாக்குறை என்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்19 வைரஸ் தாக்கத்தின் விளைவாக சீனா  அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் தனது கரத்தை மேலும் வலுவடைய செய்வற்கு சீனா பல்வேறு நகர்வுகளை தற்போது முன்னெடுத்து வருகின்றது. 

அனைத்து நாடுகளுமே முடங்கி போயுள்ள நிலையில் சீனா தனது ஏற்றுமதி தொழிற்சாலைகளை இயக்கி விட்டுள்ளது. மருத்துவ உற்பத்திகளை தயாரிப்பதற்காக புதிய தொழிற்சாலைகளும் உருவெடுத்துள்ளது.

அமெரிக்கா , இந்தியா , இத்தாலி , பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இன்றைய அத்தியவசிய தேவையாக மருத்துவ உபகரணங்களே காணப்படுகினறன.

அந்த உலக தேவையினை ஈடும் செய்யும் வகையில் சீனா ஏற்றுமதிக்கான உற்பத்திகளை ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் 16 கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி சுகாதார பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் என அனைத்தையும் மிகவும் வேகமாக சீனா தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக உற்பத்தி செய்ய கூடிய அனைத்தையும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் விதியை நோக்கி சீனா செல்கிறது.

முதலாவது உலக போரின் பின் அமெரிக்கா தனது பொருளாதாரத்தை எவ்வாறு வலுப்படுத்தி வல்லரசாக தன்மை மாற்றிக் கொண்டதோ அதே விதியை தான்   தற்போது ஏனைய நாடுகள் முடங்கி கிடக்க சீனா , தனது உற்பத்தியை அதிகரித்து பொருளாதார ரீதியில்  ஆதிக்க நிலைக்கு செல்கிறது. உலக பங்கு வர்த்தகத்திலும் சீனாவின் ஆதிக்கம்  இனி வரும் காலங்களில் மேலோங்கும் நிலையே காணப்படுகிறது. இவ்விதமான பொருளாதார பாய்ச்சலை முன்னெடுத்திருக்கும் சீனா அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு மாத்திரமல்ல உலக தலைமைத்துவத்திற்கும் சவாலை ஏற்படுத்தும் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48