பூனைகளுக்கும் கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் : சீன ஆய்வில் தகவல்..!

Published By: J.G.Stephan

11 Apr, 2020 | 03:27 PM
image

உலகம் முழுவதும் மனித உயிர்களை காவுகொள்ளும் கொரோனாவின் பிடியிலிருந்து, விலங்குகளுக்கும் தப்பவில்லை. 

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்புலிக்கு பராமரிப்பாளர் மூலம் வைரஸ் பரவி தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



இந்நிலையில், விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான ஆராய்ச்சியில் சீனா இறங்கியது.

இதில் கொரோனா வைரசுகளை செறிவூட்டி அவற்றை நாய், பூனை, கோழி, வாத்து, பன்றி ஆகிய உயிரினங்களுக்கு ஊசி மூலம் செலுத்தி சோதனை செய்தது.

பின்னர் சில நாட்கள் கழித்து அந்த விலங்குகளை பரிசோதனை செய்தபோது பூனைக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் பூனையிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பான ஆராய்ச்சி நடந்தி வருவதாகவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47