அரிசியை அதிகவிலைக்கு விற்றால் கடும் சட்ட நடவடிக்கை: நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை..!

Published By: J.G.Stephan

11 Apr, 2020 | 03:42 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபடுவோரை இனங்காண்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதோடு, இவற்றில் சிக்குபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.



அரசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது கீழ் கூறப்பட்டுள்ள அரிசி வகைகளுக்கான குறிப்பிடப்பட்டுள்ள ஆகக் கூடுதலான சில்லறை விலைகளுக்கு மேலாக இறக்குமதியாளர்,  உற்பத்தியாளர் , வழங்குனர் அல்லது வியாபாரி எவரும் விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ , விற்பனைக்கு வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக சாட்சிப்படுத்தவோ முடியாதென கட்டளையிடுகின்றது.

அதற்கமை கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும், வெள்ளை/சிவப்பு சம்பா(வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (சீரக சம்பா தவிர்ந்த) அரிசி ஒரு கிலோ 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று வெள்ளை/சிவப்பு சம்பா பச்சை அரிசி மற்றும் வெள்ளை/சிவப்பு நாடு(வேக வைத்து/அவித்து பெறப்பட்டது) (மொட்டைக் கறுப்பன் மற்றும் ஆட்டக்காரி தவிர்ந்த) அரிசி என்பனவும் கிலோ ஒன்று 90 ரூபாவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 85 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள அதிக பட்சி சில்லறை விலை ஏப்ரல் 10 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 2019 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி 2154/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 56 ஆம் இலக்க கட்டளையை இக்கடளையினால் இரத்து செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04