கொரோனாவால் அதிக பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் ! - 70 ஆயிரம் பேர் பலி

11 Apr, 2020 | 03:24 PM
image

கொரோனாவின் தீவிரத்தால்  உலகளாவிய ரீதியில் 16 இலச்சத்து 98 ஆயிரத்து 8 நூற்று 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலச்சத்து 2 ஆயிரத்து 684  பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகமான இறப்புகள் ஐரோப்பிய நாடுகளிலேயே  பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில்  கூட்டாக இதுவரை 820,109 பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 48 சதவீதமாகும். அத்துடன் 70,063 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது மொத்த இறப்பு எண்ணிக்கையின் 68 சதவீதமாகும். இதேவேளை 196,782 பேர் குணமடைந்தும் 30,232 தீவிரசிகிச்சைபிரிவிலும் உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் கொவிட்19 வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்ககின்றது.

இங்கு 158,273 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்16,081பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 55,668 பேர் குணமடைந்துள்ளனர்.

இத்தாலி ஐரோப்பிய நாடுகளில் இதுவரை அதிக உயிரிழப்புகள் பதிவான நாடாக உள்ளதுடன் நேற்றுவரை உலகளவிலும் முதலிடத்திலிருந்தது.

இத்தாலியில் இதுவரை, 147,577 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 18,849 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 30,455 பேர் குணமடைந்துள்ளனர்.

அடுத்ததாக அதிகூடிய பாதிப்பு பிரான்ஸில் பதிவாகியுள்ளது.

இங்கு 124,869 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 13,197 பேர் உயிரிழந்தும் 24,932 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

இதேவேளை ஜேர்மனியில், 122,171 பேர் பாதிக்கப்பட்டும், 2,736 பேர் உயிரிழந்தும், 53,913 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

ஸ்பெயினுடன் ஒப்பிடும் போது ஜேர்மனியில், குணமடைந்தவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.

பிரித்தானியாவில், 73,758 பேர் கெரோனா பாதிக்கியுள்ளனர். இவர்களில் 8,958 பேர் உயிரிழந்தும், 344 பேர் குணமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில்  மிக குறைவான குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை கொண்ட நாடாக பிரித்தானியா விழங்குகின்றது, 

பெல்ஜியத்தில் இதுவரை, 26,667 பேர் பாதிக்கப்பட்டும், 3,019 பேர் உயிரிழந்தும், 5,568 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

சுவிஸ்சர்லாந்தில் இதுவரை, 24,551 பேர் பாதிக்கப்பட்டும், 1,002 பேர் உயிரிழந்தும், 11,100 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அத்துடன் நெதர்லாந்தில் இதுவரை, 23,097 பேர் பாதிக்கப்பட்டும், 2,511 பேர் உயிரிழந்தும், 250 குணமடைந்தும் உள்ளனர்.

இது தவிர ஐரோப்பிய நாடுகளில் போர்த்துகல்,  ஆஸ்திரியா, ரஷ்ய, ஸ்வீடன், அயர்லாந்து உள்ளிட்ட 40 நாடுகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17