இலங்­கையின் வரி இலக்­குகள் தொடர்ந்தும் பின்­ன­டைவை சந்­திக்கும் என்ற எதிர்­வுக்­கூ­ற­லுக்கு அமை­வாக இலங்­கையில் பொரு­ளா­தாரம் எதிர்­கா­லத்தில் பின்­ன­டைவை சந்­திக்­கு­மென மூடிஸ் நிறு­வனம் எச்­ச­ரித்­துள்­ளது.

சிங்­கப்­பூரை தள­மாகக் கொண்டு இயங்கும் மூடிஸ் முத­லீட்டு சேவை இலங்­கையின் வெளி­நாட்டு செலா­வணி மற்றும் முறிகள் தரப்­ப­டுத்­தலை B1 ஆக தரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது குறித்து அந்­நி­று­வனம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது இலங்­கையின் முறிகள் தொடர்­பி­லான நம்­பிக்கை குறை­வ­டைந்­துள்­ள­மை­யினால் இலங்­கையின் பொரு­ளா­தாரம் எதிர்­கா­லத்தில் பின்­ன­டைவை எதிர்­கொள்­ள­வுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­டை­விற்கு முக்­கி­ய­மான இரண்டு விட­யங்­களை அந் நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இலங்­கையின் வரி இலக்­குகள் தொடர்ந்தும் பின்­ன­டைவை எதிர்­நோக்கும் என்ற எதிர்­பார்ப்பு அதற்­கான முதல் கார­ண­மாகும்.

அத்­துடன் வரித்­தி­ருத்தம் ஊடாக பெற்­றுக்­கொள்ள முடி­யு­மான அடை­வுகள் தொடர்பில் அர­சாங்கம் தற்­போது வைத்­துள்ள எதிர்­பார்ப்பு குறை­வ­டைந்­துள்­ளமை மற்­றைய கார­ண­மாகும். இவ்­வா­றான நிலையில் இலங்கை அர­சாங்­கத்தின் கடன் ­சுமை தொடர்ந்தும் அதி­க­ரிக்­கலாம் எனவும் மூடிஸ் முத­லீட்டு சேவை நிறு­வனம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. சர்­வ­தேச நாணய நிதி­யத்­தினால், கடன் வசதி­களைப் பெற்­றுக்­கொள்­வற்கு இலங்­கையின் வரவு செலவுத் திட்ட பற்­றாக்­கு­றையைக் குறைக்க வேண்டும் எனவும் அந்த நிறு­வனம் குறிப்­பிட்­டுள்­ளது.

அதனால் சர்­வ­தேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வ­தேச நிறு­வ­னங்­களால் கிடைக்­க­வுள்ள நிதி போது­மா­ன­தாக அமை­யாது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.