சச்சின் மக்களுக்கு மறைமுகமாக வழங்கிய சேவையை வெளிப்படுத்திய தொண்டு நிறுவனம்

11 Apr, 2020 | 12:58 PM
image

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் 21 நாள் தொடர் ஊடரங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்தியாவின் பிரபலங்கள் அந்நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த வரிசையில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் இணைந்து நாட்டு மக்களுக்கு சேவை வழங்கி வருகின்றார்.

இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 லட்சம் ரூபா வழங்கியுள்ளதுடன் ஒரு மாதத்திற்கு ஐயாயிரம் ஆயிரம் பேருக்கு உணவளிக்கும் தொண்டையும் முன்னெடுத்துள்ளார்.

இந்தியாவில், ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி வேலை செய்யும் நபர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் உள்ளனர். மேலும் வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் அவதியுறுகின்றனர்.

இவர்களுக்கு லாப நோக்கமின்றி உணவுகள் வழங்கிவரும் அப்னாலயா என்ற தொண்டு நிறுவனம் மூலம் சச்சின் 5000 ஆயிரம் பேருக்கு ஒரு மாதம் உணவு வழங்கி வருகிறார். இதை குறித்த நிறுவனம் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் அதன் டுவிட்டர் பக்கத்தில், 

‘‘லொக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த  சச்சின் டெண்டுல்காருக்கு நன்றி. ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார். மேலும் ஏராளமான நபர்கள் இதுபோன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு கொடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35