மின்சாரக் கட்டணம் எச் சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் மஹிந்த அமரவீர

10 Apr, 2020 | 08:16 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது. இவ்வருட இறுதிக்குள் மேலும் இரு புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளதால் எதிர்வரும் காலங்களில் மின் கட்டணத்தை குறைக்கவே எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,                        

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்வெட்டு ஏற்படாது என்பதோடு எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படாது என்பதை மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போன்று மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கப்பட மாட்டாது.

இரண்டு புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் இவ்வருட இறுதிக்குள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் 300 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். 2023 ஆம் ஆண்டாகும் போது மின் கட்டணத்தை மேலும் குறைக்கவே எதிர்பார்த்துள்ளோம்.

இன்னுமொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தினையும் ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளோம். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நிலக்கரி மின்உற்பத்தியை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

நாட்டில் நூற்றுக்கு 60 வீதம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்தே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

வேறு எந்த நாட்டிலும் முன்னெடுக்கப்படாதவாறு இலங்கை மக்களுக்கு பயன்கள் பெற்றுக்கொடுக்கபடுகின்றன. பல்வேறு பிரச்சினைகளுடனேயே நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். எனினும் அந்த சுமையை ஜனாதிபதி மக்கள் மீது திணிக்க விரும்பவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43