எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக விரி­வான தேசிய அமைப்­பொன்று உரு­வாக்­கப்­படும் என முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பசில் ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். எனினும் புதிய அமைப்பில் தான் எந்த பத­வி­யையும் வகிக்கப் போவ­தில்லை எனவும் பத­வி­க­ளுக்­கான நபர்­களை நிய­மிப்­பது தொடர்­பான கீழ் மட்ட ஒருங்­க­மைப்பு பணிகள் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

புதிய அமைப்பில் கல்­வி­யா­ளர்கள், புத்­தி­ஜீ­விகள், கலை­ஞர்கள் மற்றும் ஓய்­வு­பெற்ற அரச அதி­கா­ரிகள் உட்­பட பெரும் எண்­ணிக்கை­யி­லானோர் இணைந்துள்ளதாகவும் பசில் ராஜபக் ஷ மேலும் கூறியுள்ளார்.