பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்றைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம் பெற்றன. வீதி நாடகம், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல் என்பனவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.என்.எச்.நிறுவனத்தின் அனுசரணையுடன் மெதடிஸ்த திருச்சபை புகலிடம் ஏற்பாடு செய்த இவ் ஆர்பாட்டம் மட்டக்களப்பு கோட்டைமுனையிலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.

அங்கு வீதி நாடகமும் இடம்பெற்றன. அத்துடன் வன்முறையற்ற சமுகத்தை உருவாக்க ஒன்றிணைவோம் என்பதை அடையாளப்படுத்தி கைகளில் பட்டிகள் அணிவிக்கப்பட்டதுடன் செம்மஞ்சள்நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

(ஜவ்பர்கான்)