காட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்!

Published By: J.G.Stephan

10 Apr, 2020 | 06:04 PM
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மருதங்குளம் பகுதியில் காட்டிற்குள் விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர்  தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

கடந்த 08.04.2020 அன்று மாலை வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விறகு வெட்ட சென்றவேளை அங்கு குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

தன்னை தாக்கியவர்கள் கழுத்து, கை பகுதியினை கட்டிவைத்துள்ளதுடன், தன் மீது தாக்குதலை நடத்தியதாகவும்,  கண்ணிற்கு மேல் பலத்த காயமுற்றதாகவும் அக்குடும்பஸ்தர் கவலையாக தெரிவித்துள்ளார்.



இரண்டு பிள்ளைகளை கொண்ட குறித்த குடும்பத்திற்கு இதுவரை எதுவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்காலிக கொட்டில் ஒன்றிலேயே வறுமையின் நிமித்தம் வாழ்ந்து வருகின்றார்கள்.

குறித்த நபர்,  நாளாந்தம் கூலிவேலை செய்தே வாழ்ந்து வரும் நிலையில், ஊரடங்க சட்டம் காரணமாக, வேலைக்கு செல்லமுடியாத நிலையில் கிராமத்தில் கொடுக்கப்பட்ட உணவுப்பொதியினை கொண்டு தனது குடும்பம் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3.00 மணிக்கு காட்டிற்குள் சென்ற தன்னை கட்டிவைத்து தாக்கியுள்ளதுடன் சட்டவிரோத மதுபானம் தாயாரிக்கும் கோடா பெரல்கள் காட்டிற்குள் காணப்பட்டதுடன், அதில் தன்னை இருத்தி, தாக்குதலை மேற்கொண்டவர்கள் படம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அதன் பின்னர் இரவு 9.00 மணியளவில் புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் தன்னை ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸாரிடம் ஒப்படைத்த நபர்கள் நான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதான பொய் முறைப்பாடு ஒன்றினையும் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள்.

காட்டிற்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை  என  அருகில் உள்ளவர்களை அழைத்து சென்று தேடியும் கிடைக்காத நிலையில் இரவு கிராம அமைப்பின் தலைவர்களை கொண்டு பொலிஸ் நிலையம் சென்றபோது புதுக்குடியிருப்பு பொலிசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

கிராம அமைப்பின் தலைவர்கள் குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் பொலிசாருக்கு நிலமையினை எடுத்துரைத்துள்ளதுடன், களவோ சட்டவிரோத செயற்பாடுகளிலோ இவர் ஈடுபடவில்லை என்று எடுத்துரைத்துள்ளதை தொடர்ந்து பொலிசார் குறித்த நபரை விடுவித்துள்ளார்கள்.

கண்ணிற்கு மேல் காயமடைந்த நிலையிலும் கை விரல் ஒன்றில் காயத்துடன், வறுமைக்கு மத்தியிலும் தனது குடும்பத்தின் உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் குறித்த குடும்பஸ்தர் வாழ்ந்து வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31