மும்பையில் கொரோனா தொற்றுக்குள்ளான 70 க்கும் மேற்பட்ட செவிலியர்கள்!

Published By: Vishnu

10 Apr, 2020 | 05:37 PM
image

இந்தியாவின் மும்பையில் 70 இற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 250 செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநில ஐக்கிய செவிலியர் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மும்பை பாட்டியா வைத்தியசாலையில் இரு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த 15 செவிலியர்கள் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதகமான சோதனையை செய்துள்ளனர்.

பாட்டியா வைத்தியசாலையிலுள்ள இரு கொரோனா தொற்றாளர்களும் முன்னர் வாங்கோட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

தற்போது வங்கோட் வைத்தியசாலையில் 50 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில ஐக்கிய செவிலியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆகாஷ் பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.

வாங்கோட் வைத்தியசாலையில் மூன்று செவிலியர்கள் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகளை வெளிப்படுத்திய நோயாளிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவருடன் தொடர்புகளை பேணியுள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் குறித்த செவிலியர்கள் தங்கள் விடுதிக்கு சென்று 280 க்கும் மேற்பட்ட செவிலியர்களுடனும் வசித்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே 250 க்கும் மேற்பட்ட செவிலியர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மும்பையில் மேலும் ஒரு வைத்தியசாலையில் 10 செவிலியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆகாஷ் பிள்ளை கூறினார்.

இந்தியாவில் தற்போது 6,771 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 228 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

‍இதேவேளை பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட 203 கொரோனா தொற்று உயிரிழப்பு சம்பவங்களில் 21 பேர் வைத்திய தொழிலாளர்கள் என்று அந் நாட்டு மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஜோஸ் பி. சாண்டியாகோ தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13