அனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுளும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு !

Published By: Vishnu

10 Apr, 2020 | 01:57 PM
image

(ஆர்.யசி)

நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டின் உணவு தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு அரசாங்கம்  இந்த உடனடித் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து நாட்டில் நிலவும் உணவு தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.  ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள  இந்த விசேட அறிக்கையில் கூறப்படுவதானது, 

நாட்டின் அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டும்  உணவு உற்பத்தியில் நெல் உற்பத்தியின் அவசியம், மற்றும் களஞ்சியப்படுத்தல் என்பவற்றையும்  மக்களின் தேவையையும் கருத்தில் கொண்டும் நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும். கொவிட் 19 தனிமைப்படுதல் செயற்பாடுகளில் முன்னேடுக்கப்படவேண்டிய சேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் அனைத்து நெல் ஆலைகளும் திறக்கப்பட்டு நாட்டின் தேசிய நெல் உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். சிறிய நெல் ஆலையாளர்கள் பிரதேச செயலக அதிகார பிரிவுக்குள்ளும்,  நடுத்தர நெல் ஆலையாளர்கள் மாவட்ட அதிகார பிரிவுக்குள்ளும், பாரிய அளவிலான நெல் ஆலையாலர்கள் நாடு பூராகவும் தமது நெல் உற்பத்திகளை பகிர்ந்தளிக்க முடியும் எனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் மூலமாக பதில் பொலிஸ்மா அதிபர், நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், உணவு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34