வடக்கில் 3200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு     

Published By: Digital Desk 3

10 Apr, 2020 | 02:40 PM
image

தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை முழுவதும் தொழிலை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 3 ஆயிரத்து 200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 480 ஆசிரியர்கள், கிளிநொச்சியில் 431 ஆசிரியர்கள், முல்லைத்தீவில் 525 ஆசிரியர்கள், மன்னாரில் 454 ஆசிரியர்கள் மற்றும் வவுனியாவில் 310 ஆசிரியர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27