கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு: நிதியத்தின் வைப்பு மீதி 585 மில்லியனாக அதிகரிப்பு

Published By: J.G.Stephan

10 Apr, 2020 | 08:27 AM
image

ஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர், தனது ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளத்தையும், இரு கண்களையும் இழந்த உயன ஹேவகே அசோக தனது சேமிப்பிலிருந்த 5 லட்சம் ரூபாவையும் நேற்று(10.04.2020) கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர். நாடு முகம்கொடுத்துள்ள கடினமான சந்தர்ப்பத்தில் பிரஜைகள் என்ற வகையில் அதற்கு பங்களிக்க கிடைத்தமை ஒரு மனிதாபிமான கடமை என அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தியாவசிய உணவு வர்த்தக பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் அன்பளிப்புச் செய்த 25 மில்லியன் ரூபாவை அமைச்சர் சமல் ராஜபக்ஷவும், இலங்கை கிரிக்கட் நிறுவனம் அன்பளிப்பு செய்த 25 மில்லியன் ரூபாவை அமைச்சர் டலஸ் அழகப்பெறும, இலங்கை கிரிக்கட் சங்கத்தின தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தனர்.

பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி, விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் பணிக்குழாமினர் அன்பளிப்புச் செய்த 7 மில்லியன் ரூபாவை அமைச்சர் ரமேஷ் பதிரண ஜனாதிபதியிடம் கையளித்தார்.

எயார்போட் எண்ட் ஏவியேஷன் சர்விசஸ் (ஸ்ரீலங்கா) லிமிடற் நிறுவனம் 10 மில்லியன் ரூபா, அரச அதிகாரிகளின் நலன் பேணல் சங்கம் மற்றும் இரிகேஷன் இன்ஜினியரின் டிப்லொமெட்ஸ் எசோசியேஷன் நிறுவனம் என்பன தலா ஒரு மில்லியன் ரூபா, களுத்துறை பௌத்த நம்பிக்கை சபை 10 மில்லியன் ரூபா, மனோ சேகரம் 5 மில்லியன் ரூபா, பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் 2.5 மில்லியன் ரூபா, இலங்கை குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகளின் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம், அரச நிதி திணைக்களம் ஒரு லட்சத்து 25000 மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சபை 1.5 மில்லியன் ரூபா அன்பளிப்புகள் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

நேறறு பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 585 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.04.09

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37