ஜனாதிபதி செயலாளர் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது என்ன? இதோ முழு விபரமும் !  

Published By: J.G.Stephan

09 Apr, 2020 | 07:35 PM
image

(ஆர்.யசி)


தேர்தலை நடத்துவது மற்றும் பாராளுமன்றத்தை கூட்டுவது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை, பொதுத் தேர்தல் நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் என ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜெயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக அறிவித்திருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதியின் பதிலை செயலாளர் கடிதம் மூலமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் அணிப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதானது.

உங்களால் 2020.03.31 மற்றும் 2020.04.01ஆம் திகதிகள் இடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம் கிடைத்திருந்தது. ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதியின் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் எமது அலுவலகத்திற்கு கிடைப்பதற்கு முன்னரே ஊடங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தமை மற்றும் அதன் பிரதிகள் மேலும் சிலருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக சஞ்சலமடைகின்றேன்.

2020.03.02ஆம் திகதி 2165/8ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக அன்றைய தினம் நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன் புதிய பாராளுமன்றத்தை மே 14ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கான தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்ச் 20ஆம் திகதி தேர்தல் மாவட்டங்களுக்கு தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் நடத்தப்படுமென 2167/12ஆம் இலக்க வர்த்தமானியினூடாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 21ஆம் திகதி 2167/19ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது எனவும் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் 14 நாட்களின் பின்னரான தினமொன்று வாக்களிப்பு தினமாக அறிவிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

2020.04.25 வாக்கெடுப்பை நடத்த முடியாது என்றால் 24 (3) சரத்துக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வாக்கெடுப்பை நடத்தக் கூடிய வேறு தினம் தொடர்பாக விசேடமாக குறிப்பிடுவதற்கு 24(3) சரத்தின் ஒழுங்கு விதிகளுக்கமைய ஆணைக்குழு கடப்பட்டுள்ளது என்பதனை கவலையுடனாவது குறிப்பிட வேண்டியுள்ளது. அதில் வாக்கெடுப்புநடத்தும் தினம் , பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24(3) சரத்தின் கீழ் பகிரங்கப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர் என குறிப்பிடப்பட வேண்டும்.

ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள ஆலோசனைகளுக்கமைய 2020.05.28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது என இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட முடியாது. வாக்கெடுப்பு தினத்தை தீர்மானிக்கும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவினுடையது என்பதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகளில் தலையிடுவதற்கும் ஜனாதிபதி எண்ணவில்லை.

ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான அறிவித்தலை விடுக்கும் காலஎல்லை , பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24(3) சர்த்தின் ஒழுங்கு விதிகளுக்கமைய 14 நாட்களுக்கு குறையாத அதாவது ஒத்தி வைக்கப்பட்ட தேர்தலை 15ஆவது நாளிலாவது நடத்த முடியுமென்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தேர்தல் நாட்டு மக்களின் உரிமை எனவும் அது அவர்களின் இறைமை உரிமை எனவும் நான் குறிப்பிட வேண்டியதில்லை. மேற் கூறப்பட்ட விடயங்களை ஆராயும் போது அரசியலமைப்பின் 129ஆவது சரத்தின் கீழ் உயர்நீதிமன்றத்தை நாட வேண்டிய பிரச்சினை ஏற்படவில்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுடள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்பரவல் அச்சுறுத்தல் நிலைமையால், பொதுத் தேர்தலை நடத்தும் தினம் மற்றும் பாராளுமன்றத்தை கூட்டும் தினம் தொடர்பாக குழப்ப நிலை காணப்படுகின்றது. இதனால் இந்த விடயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் நிலைப்பாட்டை  கோர நடவடிக்கையெடுக்குமாறும் கோரி தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் கடந்த மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் திகதிகளில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்திற்கு பதிலளித்து ஜனாதிபதி செயலாளரினால் கடந்த 6ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32