அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 2 ஆம் கட்ட உலர்உணவு நிவாரணம்!

09 Apr, 2020 | 07:03 PM
image

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகநாடுகளில் மட்டுமல்லாது இலங்கையையும் பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக நாளாந்தம் உழைத்து தமது அன்றாட வாழ்க்கை நடத்தும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மக்களின் உணர்வுகளை அறிந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலை கிளையும் அதன் வைத்தியர் நலன்புரி சங்கமும் இணைந்து மக்களுக்கு உதவும் நோக்கில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன் முதல் கட்டமாக வெள்ளவத்தையில் மூவின மக்களும் செறிந்து வாழும் பகுதியில் 200 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இதன் 2 ஆம் கட்டமாக ஹொரணை பகுதியில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிவாரணப்பணிக்கான நிதி உதவிகளை சிறுவர் வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், பயிற்சி காலத்தில் உள்ள வைத்தியர்கள் ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46