ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளுக்காக பணியில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Vishnu

09 Apr, 2020 | 06:18 PM
image

(எம்.மனோசித்ரா)

அத்தியாவசிய சேவைகளுக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊரடங்கு சட்டத்தின் போது அதற்கான அனுமதிபத்திரமாக பயன்படுத்தும் தொழில் அடையாள அட்டை மாத்திரமின்றி தாம் பணிபுரியும் நிறுவன பிரதானியினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் வைத்திருத்தல் அவசியமாகும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனை நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, வைத்தியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந் நிபந்தனை பொறுந்தாது என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் அவர்களது தொழில் அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை என்பவற்றோடு நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும்.

சில நபர்கள் தமது தொழில் அடையாள அட்டைகளைப் தவறாகப்  பயன்படுத்துகின்றமை இனங்காணப்பட்டுள்ளமையால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அத்தியாவசிய சேவைகளுக்காக கிடைக்கப் பெற்றுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் இம் மாதம் 30 ஆம் திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும். எனினும் அதன் பின்னர் குறித்த அனுமதிபத்திரத்தை மீள புதுப்பிக்க வேண்டியது அவசியமற்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46