சீனாவின் கவனக்குறைவால் ஏனைய நாடுகளுக்கு வைரஸ் பரவியதா ? : நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் கேள்வி

Published By: Vishnu

09 Apr, 2020 | 02:36 PM
image

(எம்.மனோசித்ரா)

சீனாவின் கவனக் குறைவினால் கொரோனா வைரஸ் ஏனைய நாடுகளுக்கும் பரவியிருக்குமானால் அந்நாடுகளுக்கு சீனா இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு வைரஸ் எந்த நாட்டில் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் உறுதியான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் இவ் இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்திலேயே உருவாகியது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றி அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு பரவாமல் ஏனைய நாடுகளில் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதிப்பிற்குள்ளாக்கியது எவ்வாறு என்பது பற்றி எமது சங்கம் ஆராய்ந்து வந்தது.

இந்த வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள போதிலும் உலகின் ஏனைய நாடுகளால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வாறிருப்பினும் தற்போது அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சீனாவில் கவனக்குறைவினால் இந்த வைரஸ் ஏனைய நாடுகளிலில் பரவியிருக்குமானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு சீனா இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்விடயத்தில் சீனா தவறிழைத்திருந்தால் அந்நாட்டுக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுப்பது எவ்வாறு என்பது பற்றி எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆராய்வுகளில் இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய எமது சங்கம் கீழ் வரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறது. அந் நடவடிக்கைகளாவன,

கொரோனா வைரஸ் எந்த நாட்டில் உருவாகியது ? எவ்வாறு அந்த வைரஸ் உருவாகியது ? வைரஸ் சீனாவின் வுஹான் நகரிலிருந்து உலகின் வௌ;வேறு நாடுகளுக்கு எவ்வாறு பரவியது ? உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோருகின்றோம்.

சீனாவின் கவனக்குறைவால் இந்த வைரஸ் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பரவியிருக்குமானால் அந்நாட்டுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15