தாயின் வயிற்றிலிருக்கும் போதே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் - சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

09 Apr, 2020 | 12:20 PM
image

கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலேயே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியமானது என தெரிவித்துள்ளனர்.

பிறந்த சில நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நான்கு புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆய்வு செய்ததையடுத்தே சீன மருத்துவர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். 

இவ் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பிறந்த உடனேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர், ஏனெனில் அக் குழந்தைகளின் தாய்மாருக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

நான்காவது தாய்க்கும் குழந்தைக்கும் குழந்தை பிறந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை ஒரு குழந்தைக்கு பிறந்து 30 மணித்தியாலத்தின் பின் கொரோனா அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது.

 

இரண்டு குழந்தைகள் பிறந்து ஐந்து நாட்களில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தைக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இவ் நான்கு குழந்தைகளை ஆய்வுக்குட்படுத்திய ஆராய்ச்சியாளர்களால் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தொப்புள் கொடி வழியாக குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்பதை  'நிராகரிக்க முடியவில்லை' இருப்பினும், இதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

வைத்தியசாலையில் இருந்த காலத்திலும் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் இருந்தபோதும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சிறப்பு நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் அதற்கான வாய்புகள் 'குறைவாக' இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

எனினும்  ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்ப்பிணிப்பெண்கள் தம்மை பாதுகாத்து கொள்வதில் இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33