அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரை கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை விதித்து அம்பாறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முஹமட் மஹமுத் என்ற நபரை கொலை செய்த காரணத்திற்காகவே குறித்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.