தனிமைப்படுத்தலில் 44 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளனர் - இராணுவத் தளபதி

Published By: Digital Desk 3

08 Apr, 2020 | 04:30 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களில் 44 பேர் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளனர். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏனைய 1200 க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் தொற்றுக்குள்ளானவர்கள் என்று இராணுவத்தளபதி லெபட்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவு செய்து வீடு திரும்புபவர்கள் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்திய அவர், அவ்வாறான நபர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது அவசியமல்ல என்றும் இராணுவத்தளபதி மேலும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

3415 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கண்காணிக்கை நிறைவு செய்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். எனினும் மேலும் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உட்படுமாறு நாம் அவர்களிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

இன்னும் 1262 பேர் தனிமைத்தல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 33 பேர் நாளைய தினம் தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பவுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 44 பேர் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளனர். எஞ்சிய 1218 பேரும் இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் ஆவர். நேற்று செவ்வாய்கிழமை இறுதியாக இனங்காணப்பட்டவர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டிருந்தோராவர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வீடுகளுக்குச் சென்றோரை மாத்திரமே மேலும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது அத்தியாவசியமானதல்ல.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44