தனிமைப்படுத்தல் காலம்  21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு

Published By: J.G.Stephan

07 Apr, 2020 | 09:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரின் தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும்  இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார். 

இந்நிலையில் ஏற்கனவே 14 நாள்  தனிமைப்படுத்தல் காலத்தை  நிறைவு செய்த  அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வரை இலங்கையில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அல்லது நிலையங்களில் மட்டும் 3415 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியிருந்தனர்.

இவர்களுக்கு  தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும்  மேலும் 14 நாட்கள்  சுய தனிமைப்படுதலில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த சுகாதார அமைச்சின்  தொற்று நோய் தடுப்புப் பிரிவின் உடற் கூற்று வைத்திய நிபுணர்  ஆனந்த விஜேநாயக்க,

' இதுவரை  தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோருக்கு வெறும் சான்றிதழ் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.

இனி மேல் அந்த காலத்தை நிறைவு செய்யும் அனைவரையும் விஷேட வைத்திய பரிசோதனைக்குட்படுத்துவோம். உட்படுத்தி கொரோனா தொடர்பில் பரிசோதனைகளை செய்து அது குறித்த வைத்திய அறிக்கையையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58