இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10 தொன் மருந்துப்பொருட்கள் அன்பளிப்பு !

07 Apr, 2020 | 08:13 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலினால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் 10 தொன் அத்தியாவசியமான மருந்து தொகுதியை இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகுதி மருந்துப்பொருட்கள் எயார் இந்தியா விசேட விமானம் மூலமாக இன்று செவ்வாய்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

எவ்வாறான சூழ்நிலையிலும் இலங்கைக்கான ஆதரவில்  இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டினை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைகிறது.

உள்நாட்டில் காணப்படும் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் தமது வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம் குறித்த வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்கள் மட்டத்திலான காணொளி மூலமான மாநாடு இந்திய பிரதமரின் யோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்ததனை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

சார்க் கொவிட் – 19 அவசரகால நிதிக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்கள் மார்ச் 26 ஆம் திகதி காணொளி மாநாடொன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் இந்திய சுகாதார அமைச்சு சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்களுக்கு இணையம் மூலமான பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. 

குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ள சார்க் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (SDMC) சார்க் உறுப்பு நாடுகளின் கொவிட் – 19 நிலைமை குறித்த இணையத்தளம் [http://www.covid19-sdmc.org/] ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சகல திட்டங்களிலும் இலங்கை மிகவும் முக்கியமான ஒரு பங்காளராக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38