அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த சிறியின் ஏற்பாட்டில் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் பாதை சீர் திருத்தம் செய்யப்பட்டது. 

அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலான பிரதான வீதி கடந்த பல வருடகாலமாக செப்பனிப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்பட்டது.

இதனால் இவ்வீதியின் ஊடாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் உட்பட பாதசாரிகள் மற்றும் வாகனசாரதிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் திருத்தபணிகள் மேற்கொள்ளபடவில்லை.

இதனை உணர்ந்து அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த சிறியின் ஏற்பாட்டில் முச்சக்கரவண்டி சாரதிகள், பிரதேச மக்கள், வைத்தியசாலை ஊழியர்கள் அடங்களாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இணைந்து சிரமதான பணி மூலமாக இப்பாதை சீர் திருத்தம் செய்யப்பட்டது. 

(க.கிஷாந்தன்)