இந்தியா மலேரியாதடுப்பு மருந்தினை வழங்காவிட்டால் பதிலடி – டிரம்ப் எச்சரிக்கை

07 Apr, 2020 | 11:05 AM
image

மலேரியாவை கட்டுப்படுத்தும் மருந்துகளை அமெரிக்காவிற்கு  ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்தியா நீக்காவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மலேரியாவினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின்   மருந்தினை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை தளர்த்தவேண்டும் என இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக டிரமப் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு அந்த மருந்து கிடைப்பதற்கு நீங்கள் அனுமதித்தால் அதனை நான் பாராட்டுவேன் என தெரிவித்தேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை,என்றால் பரவாயில்லை ஆனால் நிச்சயம் பதில் நடவடிக்கையிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மலேரியா தடுப்பு மருந்தினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியுமா என்பது பரிசோதனைகளின் மூலம் உறுதியாகத போதிலும் டிரமப் அந்த மருந்து தற்போதைய நிலையை மாற்றும் என தெரிவித்து வருகின்றார்.

இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளமைக்காக அமெரிக்க பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்விக்கு டிரம்ப்,இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நல்லுறவு உள்ளதால் மோடி அப்படி தடைகளை விதிக்கமாட்டார், விதித்தால் நான் ஆச்சரியமடைவேன் என தெரிவித்துள்ளார்.

மோடி மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதை நான் விரும்பவில்லை,அவர் அவ்வாறானா முடிவை எடுத்துள்ளார் என நான் கேள்விப்படவில்லை,பல வருடங்களாக அவர்கள் அமெரிக்க வர்த்தகத்தினால் பயன் அடைந்துள்ளனர்,எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10