ஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை  : மூவர் கைது!

06 Apr, 2020 | 09:17 PM
image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய கும்பல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடிகொண்டிருந்த போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இதன் போது குறித்த கும்பலின் முக்கிய சந்தேகநபர் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகம் சேர்ச் லேனில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து குறித்த இடத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.

அதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 மோட்டார் சைக்கிள்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் 5 மோட்டார் சைக்கிள்களையும் இராணுவத்தினர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37