இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி ஒரேநாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். 

பீஹாரில் தற்போது பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , 25 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு 8 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரமடைந்துள்ள இப்பருவமழையால் பீஹாரில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாக பீஹார் மாநில அரசும், வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

பீஹார் மட்டுமின்றி உத்திரப்பிரதேசத்திலும் கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கியதில் 42 பேர் பலியாகியுள்ளதாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பீஹார், உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மின்னல் தாக்குதலுக்கு 95 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.