இலங்கையில் கொரோனா குறித்த தற்போதைய நிலை ! - முழு விபரம் இதோ !

Published By: Digital Desk 3

06 Apr, 2020 | 09:07 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இன்று (06.04.2020) இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்துக்குள்  2 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  38 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந் நிலையில் 135  கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து மூன்று வைத்தியசாலைகளில்  சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.   

அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிலேயே இவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனைவிட நாடளாவிய ரீதியில் மேலும் 30 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று சந்தேகத்தில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட  259 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

தொற்று நோய் தடுப்புப் பிரிவினரின் தரவுகளின் பிரகாரம் இதுவரை கொரோனா வைரஸ் தககம் காரணமாக அதிக பாதிப்பு மேல் மாகாணத்திலேயே நிக்ழ்ந்துள்ளது.  பதிவான 178 தொற்றாளர்களில் 83 பேர் மேல் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதுடன்,  அவர்களில் 44 பேர் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.  கம்பஹா மாவட்டத்தில் 14 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 25 பேரும் கொரோனா தொற்று காரணமாக இன்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியாகும் போது கண்டறியப்பட்டிருந்தனர்.

மாவட்ட ரீதியில் கொழும்புக்கு அடுத்த படியாக அதிக தொற்றாளர்கள் புத்தளம் மாவட்டத்திலேயே கண்டறியப்ப்ட்ட நிலையில் அங்கு கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை  32 ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றால் அதிக ஆபத்து உள்ள மாவட்டங்களாக  கண்டி மற்றும் யாழ். மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்விரு மாவட்டங்களிலும் தலா 7 பேர் வீதம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட  இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும்,  குருணாகல், மாத்தறை மாவட்டங்களில் தலா இருவர் வீதமும்,  காலி, கேகாலை,  மட்டக்களப்பு, பதுளை  ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர்களும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பொலிஸ் பிரிவில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென மரணமடைந்தை அடுத்து அப்பகுதியில்  பதற்றம் ஏர்பட்டது. அம்மரணம் கொரோனாவால் ஏற்பட்டதா என சந்தேகம் நிலவிய நிலையில், அது குறித்து செய்யப்பட்ட பரிசோதனைகளில், அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40