கொவிட்டுக்கு பின்னரான பொருளாதார ஒழுங்கு

06 Apr, 2020 | 05:58 PM
image

உயிரிழப்புகளையும் பொதுச்சுகாதாரத்துக்கான பாதிப்பையும் பொறுத்தவரை, கொரோனாவைரஸ் தொற்றுநோய் ( கொவிட் - 19 ) மாபெரும் நாசத்தை விளைவிக்கும் என்பது மாத்திரமல்ல, மிகப்பெரிய துன்பத்துக்கும் வழிவகுக்கப்போகிறது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

உயிர்களைப் பாதுகாப்பதற்கும் பொருளாதார நடவடிக்கைக்கும் இடையில் உள்ளார்ந்த பதற்றத்தைக் கொண்டுவருவதாக இந்த நோயின் தன்மை அமைந்திருக்கிறது. உயிர்களைப் பாதுகாத்தல்  பாரியளவிலான முடக்கல்கள், பயணங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் மற்றும் சமூக தனிமைப்படுத்தல் ஆகியவை சம்பந்தப்பட்டதாக இருக்கின்ற அதேவேளை, பொருளாதார நடவடிக்கை மக்களின் நடமாட்டங்கள், புலம்பெயர்வு, விநியோக சங்கிலித்தொடர்கள், வாணிபம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.

துன்பத்தைக் குறைப்பதற்கு உலகம் பூராவுமுள்ள அரசாங்கங்கள் வேறுபட்ட அளவுகளில் தலையீடுகளைச் செய்திருக்கின்றன. ஆனால், நெருக்கடியும் அதைத் தணிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் புதிய உலக பொருளாதார அணுகுமுறை ( Global economic paradigm ) பற்றி என்ன கூறுகின்றன? 

சமூகநலன்புரி ( Welfare State ) அரசு மீண்டும் வருகிறது. இதுவே பல தசாப்தங்களுக்குப் பிறகு உலக பொருளாதார கொள்கை வகுப்பதில்  ஏற்பட்டிருக்கக்கூடிய முக்கியத்துவம்வாய்ந்த மாறுதலாகும். அரச கொள்கையில் சமூகநலன் அம்சம் மிகவும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில் கூட ஒருபோதுமே முற்றிலுமாக  மங்கிப்போய்விடவில்லை என்பதே உண்மையாகும்.

ஆனால், அடிப்படை பொதுச்சேவைகளை வழங்குவது மற்றும் ஒழுங்கமைப்பாளராக செயற்படுவது என்ற அதன் மையப் பணியை அரசு தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு எஞ்சிய செயற்பாடுகளை தீர்மானிப்பதை சந்தை சக்திகளிடம் விட்டுவிடவேண்டும் என்பதே முதன்மையான மெய்யறிவாகும்.

பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அடிப்படை அம்சத்திலும் அரசாங்கங்கள் தலையீடு செய்யவேண்டியிருக்கிறது என்பது இப்போது தெளிவாகிறது. அவ்வாறு தலையீடு செய்தால்தான்  வறியவர்களைப் பொறுத்தவரை, உணவு மற்றும் பணப் பரிமாற்றம் ஒரு நடைமுறை யதார்த்தமாக மாறும் பொதுவில்  பிரஜைகளைப் பொறுத்தவரை, இலவச அல்லது  மானிய அடிப்படையிலான சுகாதாரப்பராமரிப்பு குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் வேலையில்லாதிருப்போரைப் பொறுத்தவரை, கொடுப்பனவுகளை வழங்கும் ஒரு திட்டம் கொண்டுவரப்படவேண்டியிருக்கலாம் வர்த்தகத்துறை மற்றும் கம்பனிகளைப் பொறுத்தவரை, நிதி ஆதரவு , வரிச்சலுகைகள் வழங்கப்படவேண்டியிருக்கும் ; தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்தவரை, அரசாங்க செலவினங்கள் அதிகரிக்கப்படவேண்டியிருக்கும். உலகம் வலதுசாரித் தலைவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு நேரத்தில், உலக இடதுசாரிப்  பொருளாதார வாதம்  செல்வாக்குப் பெறுவதைக் காணக்கூடியதாக இருப்பது ஒரு விசித்திரமான நிலைமையாகும்.

ஆனால், இதன் அர்த்தம் பொருளாதார நடைமுறைகள் பழைய வழிகளுக்கு திரும்பிவிடும் என்றில்லை. தொழில்நுட்பத்தின் வகிபாகம் மேம்பட்டு முனைப்பானதாகப்போவது  மிகவும் முக்கியமான மாற்றமாக இருக்கும். பொருளாதார ஒருங்கிணைப்பை முன்னென்றும் இல்லாத வழிகளில் ஏற்கெனவே தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஊக்குவித்து முன்னேற்றியிருக்கின்றன என்பதே உண்மையாகும். இதுவே வீடுகளில் இருந்து அலுவலகப்பணிகளைச் செய்வதை சாத்தியமாக்கியது.

மனிதர்கள் தங்களது வாழ்க்கையை நடத்துகின்ற,   தொழில்துறைகளை நடத்துகின்ற , பணத்தைச் செலவுசெய்கின்ற, பணியாற்றுகின்ற , நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தொடர்புகொள்கின்ற வழிகளில் தொழில்நுடபம் எக்காலத்திலும் இலலாத அளவுக்கு தங்கியிருக்கும் நிலையை எதிர்பார்க்கலாம்.இவையெல்லாம் டிஜிட்டல் நிலைமாற்றத்தை (Digital ttransformation) துரிதப்படுத்தும். அது குழப்பகரமானதாக அமையும்.அரசாங்கமும் தனியார்துறையும் இதனால் பாதிக்கப்படும்.ஒரு புறத்தில் சமூகநலன்புரிசேவைகளையும் (Welfarism) அரசின் அதிகரித்த பாத்திரத்தையும் மறுபுறத்தில், தொழில்நுட்ப தலையீட்டையும் (Digital disruption) கொண்ட இந்த இரட்டைச்செயன்முறை கொவிட்டுக்கு பின்னரான ஒழுங்கை தீர்மானிக்கும்.

(இந்துஸ்தான் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04