யாழ்ப்பாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை: எவருக்கும் தொற்று இல்லை

Published By: J.G.Stephan

05 Apr, 2020 | 09:07 PM
image

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 15 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட மூவரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதைக்குட்படுத்தப்பட்டன.

அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.



அத்துடன், அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்றவர்கள் என அரியாலை, குருநகர் மற்றும் கொழும்புத் துறை பகுதிகளில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 12 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


அவர்கள் 12 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50