வீட்டிலிருந்து தொழில் செய்யும் வாரம் மீண்டும் அமுல்

Published By: Digital Desk 3

05 Apr, 2020 | 02:09 PM
image

(ஆர்.யசி)

அடுத்தவாரம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் வேலை நாட்களில் அரச மற்றும் தனியார் துறையினர் வீடுகளில் இருந்து தமது வேலைகளை செய்யவேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதற்கமைய எதிர்வரும் நாட்கள் மிகவும் அச்சுறுத்தலான நாட்களாக கருதப்படுவதால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரையில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நீடிக்கும் எனவும் ஏனைய 19 மாவட்டங்கள் நாளை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். அதன் பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ள நிலையில் மீண்டும் எப்போது ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வேறு எந்த தேவைக்காகவும் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறும் நபர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இந்த காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வீடுகளுக்கு கொண்டுசேர்க்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் முறையாக அது இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எந்த மாவட்டமாக இருப்பினும் அங்கு விவசாயத்திலும், சிறு தோட்டங்களிலும், ஏற்றுமதி பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபடும் விவசாயிகளுக்கு எந்தவித தடைகளும் இல்லாது வேளைகளில் ஈடுபட முடியும். அதேபோல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபட மக்கள் பொறுப்புடனும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றியும் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள் மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் அவ்வாறே கடைப்பிடிக்கப்படும். அத்துடன்  எக்காரணம் கொண்டும் இந்த பிரதேசங்களில் உள்நுழைவதோ  அல்லது வெளியேறுவதோ மீள் அறிவித்தல் வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே கடந்த மார்ச்  மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் வாரமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்ப்ட்ட நிலையில், அதனை மேலும் ஒருவார காலம்  முழுவதும் நீடிக்க அரசாங்கம் பின்னர் அறிவித்தது. அதற்கமைய ஏப்ரல் மாதம்  3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த காலத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி வரையில் நீட்டுக்க அரசாங்கம் இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

 இந்த காலப்பகுதியில், அரச, தனியார் நிறுவங்கள் அனைத்தும் அதன்படி இயங்க வேண்டும் எனவும் அத்தியவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவை மற்றும் திறைசேரி ஆகியன அத்தியாவசிய சேவை பட்டியலுக்குள் இணைக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்களை விநியோகித்தல், சுங்க நடவடிக்கைகள், மின்சாரம், நீர், எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளும் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40