பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்

Published By: J.G.Stephan

05 Apr, 2020 | 08:09 AM
image

மக்கள் நலனுக்கான பரிந்துரைகளை அமுல்படுத்தத்தவறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என மத்திய வங்கியின் ஆளுநர், பேராசிரியர் டபிள்யு.டி லக்‌ஷ்மன் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் சர்வதேச நிதியை நாட்டிற்கு கொண்டுவருதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அனைத்து இலங்கையர்களிடமும் நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களிடமும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனாவால் ஏற்பட்டள்ள நெருக்கடியான நிலைமைகளை அடுத்து பொதுமக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடமையாகின்றது.
அந்த செயற்பாடுகளிலிருந்து விலகும் பட்சத்தில் நாம் சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படும். ஆகவே அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்.

மேலும், கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில்,நாட்டு மக்கள், வெளிநாடுகளிலிலுள்ள இலங்கையர்கள், இலங்கையை நேசிக்கும் வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு இருப்பு மற்றும் நிதியத்தை இலங்கையின் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவது அவசியமாகின்றது.

நாட்டின் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் சிறப்பு நிதி நிறுவனங்களுக்கு, அவற்றை முன்னெடுத்துச் செல்ல விசேட நிவாரணங்கள் வழங்குவற்குரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அது தொடர்பில் காணப்படும் அந்நிய செலாவணி விதிமுறைகளை தளர்த்தவும் முழுமையான வரிவிலக்குகளை வழங்குவதற்கும் தயாராகி வருகின்றோம்.

சர்வதேசத்தில் இருந்து நிதியை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு கடந்த இரண்டாம் திகதி முதல் அடுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை முகங்கொடுப்பதற்கு இது பாரிய ஒத்துழைப்பை வழங்குவதாக இருக்கும் என்றுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30