தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில் தலகிரியாகம என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கலேவல, தலகிரியாகம என்ற இடத்தில் டிப்பர் வாகனம் ஒன்று உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதி வீதியைவிட்டு விலகி வயல் வெளியில் வீழ்ந்து வீபத்திற்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்தியவர்  மரணமடைந்துள்ளதாக கலேவல பொலிசார் தெரிவித்தனர்.

தலகிரியாகம தென்னகோன்புர என்றஇடத்தைச் சேர்ந்த 37 வயதுடையவரே விபத்தில் மரணமாகியுள்ளார். 

கலேவல பொலிசார்  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.